பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழர் தோற்றமும் பரவலும்


இளமகளிர்களும். ஏன்-சில வயது முதிர்ந்த மகளிர்களும் இன்றும் அணிந்துகொள்ளும் கால் சிலம்பும் அணியப்பட்டன. மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்ட, களிமண்ணால் ஆன சிறு உருவச்சிலை மற்றும் சிறு வெண்கலச்சிலைகளிலிருந்து, சிந்து சமவெளிப்பகுதிகளிலும் சிலம்பு அணியப்பட்டதை அறிகிறோம். மிகவும் வியப்பிற்கு உரியது என்னவென்றால், கிரீட்டு நாட்டுத் தொல்பழம் நகரமாகிய “க்னோஸ்லோஸ்” (Knossos) நகரில் உள்ள சுவர் மற்றும் மேல்மண்டப ஓவியத்தில், மேலே கூறிய மாதிரியான காற்சிலம்பு காணப்படுவதுதான். மிகச் சிறந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம், ஒரு காற்சிலம்பை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது.

தொல்பழங்காலத் தென் இந்தியாவுக்கும் மெஸ்படோமியாவுக்கும் இடையில் இருந்த தொடர்புக்கான நம்பத்தக்க காலக் கணிப்பை முறைப்படுத்தும் ஒரு வாயிலைச், சுமேரிய நாட்டில், குறிப்பாக, கிஷ் மற்றும் கஸா (kiss and Susa) பகுதியில், கி.மு. ஐந்து முதல் மூன்று வரையான ஆயிரத்தாண்டு காலத்தைச் சேர்ந்தனவாக அகழ்ந்து எடுக்கப்பட்டவை தந்து உதவுகின்றன. (குறிப்பு:20) அவை. அங்கு. இந்தியச் செய்பொருட்கள் இருந்தமையினை வெளிப்படுத்துகின்றன. வியப்பிற்குரிய சில பொருள்கள் வருமாறு:

1) இழவுவினைக்குரிய மண்பாண்டங்கள்.

2) நீள்வட்ட, குறுகிய கால்களைக் கொண்ட மெருகூட்டப் படாத மண்பாண்டம்.