பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழர் தோற்றமும் பரவலும்


தெய்வவழிபாடு, உண்மையில், உலகெங்கும் நிறைந்த ஒன்று என்பதைக் காண்கிறோம்; தாய்த்தெய்வத்தைக் குறிப்பிடும் ‘அம்மா’ என்று சொல்வதாலும் குறிப்பிடத்தக்கது. எகிப்தில் “அம்மோன்” (Ammon) என்ற கோயிலைப் பெற்றிருக்கிறோம். கிரீட், நகரில் உள்ள தாய்க்கடவுளின் சுடுமண்ணால் செய்யப்பட்ட, உருவச் சிலை, மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. தென்னிந்தியப் பழங்குடியினரின் தொல்பழங்காலப் பெண் தெய்வம் “ஐயை” என்பதாம். (குறிப்பு: 22), அவள் இப்போது, காளியாகவும், பத்ரகாளியாகவும், கேரள நாட்டுப் பகவதியாகவும் மாறிவிட்டாள். தொல்பழங்காலக் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையது, பெண்களைக் கோயில்களுக்குப் பொட்டுக் கட்டி விடுதலாம். இவர்கள், நம் நாட்டில் “தேவரடியார்கள்” என அழைக்கப்படுவர். பரத்தையர், அல்லது ஆடல் மகளிரைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள். இவர்களைப் பற்றி, அரிதாகக் கூடக் குறிப்பிடவில்லை. கோயில்களுக்குப் பொட்டுக்கட்டி விடும் இவ்வழக்கம் வடஆப்பிரிக்கக் கடற்கரையில் சிக்கா (Sicca) வில் உள்ள பொயினிஷியக் குடியிருப்பு, சிரியா நாட்டு “ஹெலியோபோலிஷ்” (Helio Polis) மற்றும் அர்மீனியா, மேற்குச் சிற்றாசியாவில் உள்ள லிடியா (Lydia) மற்றும், கிரேக்கநாட்டின் தெற்கில் உள்ள கோழின்னித் (Cuzinth) நகரிலும் உள்ளது. (குறிப்பு: 23), சிற்றாசிரியாவில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நிலைகொண்டிருந்தது. கடவுள் வழிபாட்டாளராகிய மகளிரை, அக்கடவுளுக்கே மணம் செய்து வைக்கும். தென்னிந்தியாவுக்கே உரியதும், கோயிலோடு தொடர்புடையது மான பிறிதொரு வழக்கம், மெஸ்படோமியாவில் பெரு வழக்காம். ஆனால், இப்பழக்கம் மெஸ்படோமியாவில், துரதிர்ஷ்டவசமாகத் தெய்வத்தன்மை வாய்ந்த பரத்தையர் ஒழுக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. பாபிலோனியப் பழங்கதைகளில் வரும்