பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

95


“மர்துக்” (Marduk) என்ற பழம்பெரும் கடவுள், மற்றும் “ஷமஷ்” (Shamash) என்ற ஞாயிற்றுக் கடவுள்கள், இம்மகளிர் வழிபாட்டாளரை மணந்து கொண்டனர்; ஆனால் மக்கள் குழந்தைகளையே பெற்றெடுத்தனர் எனக் கூறப்படுகிறது.

தலைமயிரைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கும் பிறிதொரு வழக்கத்தையும் ஈண்டு நினைவுகூரலாம். (குறிப்பு :24) கி.பி 290-ல் வாழ்ந்திருந்த, உரோம் நகரத்துச் சமயத்தலைவராம் “லுஷியன்” (Lucian) என்பவர், பொய்னிஷியாவில் “பைப்லஸ்” (Byblus) என்ற இடத்தில் உள்ள கோயிலில், ஒருபெண், தன் தலைமயிரை அறவே வழித்தெடுத்து, அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு அர்ப்பணித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அக்கோயில், இடுப்பிலிருந்து அடிப்பகுதி வரையான மீன் வடிவக் கடவுளுக்கு உரியதாக, வியத்தகு நிலையில் குறிப்பிடப்பட்டுளது. அக்கோயிலோடு மீன்கள் நிறைந்த தெய்வத்தன்மை வாய்ந்த குளம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது, மத்ஸாவதாரப் பழங்கதையை நினைவூட்டுகிறது (குறிப்பு : 25) மீன் ஒன்று குறிப்பிடப்படும் மெசபடோமிய வெள்ளப் பேரூழிப் பழங்கதை ஒன்றை இத்துடன் இணைத்துக் கொள்க. நான் முன்பே குறிப்பிட்ட, ஓனெஸ் (Oannes) என்ற மனித மீன் பற்றிய பழங்கதை ஒன்றை நம் நினைவுக்குக் கொண்டு வந்தால், இவை அனைத்தும், தொல்பழங்கால உலகத்துச் சமய முறைகளில் இந்தியச் செல்வாக்கு ஓங்கியிருந்ததை உணர்த்தும். மீன் வழிபாட்டு நெறி, இந்தியாவில் பெரு வழக்கில் இருந்தது. இந்திய நாட்டிலிருந்து வெளிநாடு சென்று குடியேறியவர்கள். இவ்வழிபாட்டு நெறியையும், தங்களோடு, அத்தொலை நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். நாம் எடுத்துக்கொண்ட பொருள் குறித்த ஆய்வுக்குத் திரும்பினால், கிரேக்க நாட்டுப் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான