பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழர் தோற்றமும் பரவலும்


அடக்குகிறானோ அவனே அப்பெண்ணை மணம் கொள்வதில் வெற்றிகொண்டவன். மத்திய தரைக்கடல் தீவுகளில் ஒன்றாகிய கிரீட்டில் (Crete) உள்ள கிண்ணம் ஒன்றில், காளை ஏறுதல் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. (குறிப்பு : 31), கிரீட்டன் தீவுப் பழக்க வழக்கங்களுக்கும், தென்னிந்தியப் பழக்க வழக்கங்களுக்கும் இடையில் உள்ள ஒருமைப்பாடு, கிரீட் மீது தென்னிந்தியா ஆக்கம் செலுத்தியது என்ற உண்மையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாத அளவு நெருக்கமானதாகும். கிரீட்நாட்டு நாகரீகத்திற்குத் தென் இந்தியப் பழங்குடியினராகிய கிராதர் (Kirata) களே பொறுப்பாவர் எனப் பிறிதோர் இடத்தில் கருத்துத் தெரிவித்துள்ளேன். கிரீட் தன் பெயரை இவ்வினத்திலிருந்தே பெற்றுக் கொண்டது. (குறிப்பு : 32).

எகிப்திய சமய வழிபாட்டு நெறியாகவும் விளங்கிய காளை வழிபாட்டு நெறியோடு நெருங்கிய தொடர்புடையது. பேராற்றலின் படிவமாகக் கருதப்படும் இலிங்க வழிபாடு. (குறிப்பு : 33) மத்தியதரைக் கடல் இனத்தவரிடையே உள்ள பலகிளையினர், இலிங்க வழிபாட்டானராவர். (R.V. Sismadevas VII, 21-5., X 99-3) இலிங்க வடிவம், சிந்துவெளியில் பெருமளவில் கிடைக்கும் கல்லால் ஆன வட்டமும் உருளையும் கொண்டது. தொல்பழங்காலக் கிரீட் நாட்டின், ஆட்சி பூர்வ சமயம், ஒன்று, நிற்கும் நிலையில் உள்ள கற்கம்பம், அல்லது, செதுக்கிச் செய்யப்பட்ட தெய்வீக மரம் ஆகும். கிரீட்டன் மாநிலத்தின் கடவுள் வழிபாட்டு நிலையை இது பிரதிபலிக்கிறது. பண்டைத்தமிழரின் கடவுள், “ஐந்து” எனப்படும் கம்பமாம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப வழிபாடு, ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த ஒன்று. அதனால்தான். பழம்பெருங்காலத்தில் வழிபாட்டு தெய்வமாகக் கருதப்பட்ட கற்கம்பங்கள் மீது, தன் கல்வெட்டுக்களைப் பொறித்தான்