பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

101


அசோகப் பேரரசன், இறந்தார் உடலைப் புதைக்கும் மேடுகளில் நடப்பட்ட புத்தஸ்தூபிகளும், இக்கற்கம்ப வழிபாட்டு நெறியிலேயே அமைக்கப்பட்டன. ஐந்து வடிவம், இலிங்க வடிவமாக, மாறிய பின்னர், பண்டைத் தமிழர், கோயில்களுக்கு முன்னர் த்வஜஸ்தம்பங்களை நட்டு விட்டனர். திருவிழா அல்லது திருமணப் பந்தல் தொடக்கமாக, மூங்கில் கொம்பு அல்லது வேறு மரக்கொம்பு ஒன்றை நட்டு அதற்கு வழிபாடு செய்யும் வழக்கத்தில், இந்த வழிபாடு பிறிதொரு வகையில் இன்னமும் இருப்பதைக் காணலாம். மாற்று வடிவில் செய்யப்பட்ட கொம்பு வழிபாடு, காளை வழிபாட்டை நினைவுபடுத்துகிறது. கிரீட்டில் வழக்காற்றில் உள்ள, கடவுள் அல்லாத அதன் பரிவாரங்களின் வழிபாடு, தென் இந்தியாவில், இன்றும் வழக்காற்றில் உள்ள வழிபாட்டு நெறிக்கு நிகரானதாம். சாம்பிராணி போலும் மணப்புகைகள் எழுப்பப்படும். சங்கு ஊதப்படும். யாழும், குழலும், தெய்வ இசையாக இசைக்கப்படும். மணப்பொருள் எரிக்கப்படும்போது, கைமணி அடிக்கப்படும். அதைத் தொடர்ந்து தாளத்திற்கேற்ப, தேவதாசிகள், அவ்விலிங்கத்தின் முன் ஆடல் புரிவர்.

தாய்த் தெய்வவழிப்பாட்டு நெறியாளரால் மேற்கொள்ளப்பட்ட தாய்வழி உரிமை முறை. பழம்பெறும் நாகரீகத்தின் பிறிதொரு கோட்பாடாம். (குறிப்பு : 34) அது. நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் மக்கள்தாயம் என்பதற்கு எதிர்மறையானதும், மலபார் நாட்டில் நிலவுவதுமான மருமக்கள் தாயம் ஆகும். மருமக்கள் தாயம், ஒருகாலத்தில், தென்இந்தியா, தென்ஐரோப்பா, சிற்றாசியா, மெசபடோமியா மற்றும், எகிப்து நாடுகளில் இருந்தது. தென் இந்தியாவையும், உலகத்தின் தொல்பழங்கால ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இணைப்பாக இருந்தது இதுவும் ஒன்று. எகிப்தில் உள்ளது