பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழர் தோற்றமும் பரவலும்


செய்யப்பட்ட 300 கேடயங்கள், மனம்மகிழ் பூஞ்சோலையில் உள்ள குரங்கு மற்றும் மயில்கள், திருக்கோயிலின் சந்தன மரத்தால் ஆன கம்பங்கள் ஆகிய, அனைத்தும் இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்பட்டனவாம். ஆகவே, “ஒப்பிர்” என்பதை இந்தியாவில், அதிலும் குறிப்பாகப், பாம்பாய்க் கடற்கரை நகராம். “சோபாரா” வாகக் கொள்வதே பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. ஹிப்ரு மொழியில் வரும் “ஷென்ஹாப்பின்” (Shenhabhin) சமஸ்கிருத “இப்ஹதந்தா” (Ibha danta) ஆகிய சொற்கள், தந்தம் எனும் பொருள் உடையவாம். ஹீப்ரு மொழிக், “கோபி” (Kophy) வாலில்லாக் குரங்கு ஆகும். மேலும், அம்மொழி, “துக்கிம்” (Tukhin) என்ற சொல், தமிழ்த்தோகை ஆகும்.

திருவாளர்கள், “பிர்ட்வுட்” (Bird wood) மற்றும் “பாஸ்டர்” (Foster) ஆகியோர் பதிப்பித்த “கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் கடிதப் புத்தகம்” (The first Letter Book of the East India Company) என்ற நூலையும், திருவாளர் “எச். ஜி. ராவிலின்சன்” (H.G. Rawlinson) அவர்களின் “இந்தியாவும், மேற்கு உலகத்திற்கும் இடையிலான போக்குவரத்து” (Inter Course between India and the Western World) என்ற நூலையும் காண்க.

திருவாளர் கென்னடி அவர்கள், ஓ.கீ.அ.கு. என்ற செய்தி ஏட்டில் எழுதியிருக்கும் கட்டுரை (ஏப்ரல், 1898) யினையும், திருவாளர் பூலர் (Buller) அவர்களின் “இந்தியா பற்றிய ஆய்வு” (Indian Studies) என்ற நூலையும் (பகுதி. 3. பக்கம் 81-82) காண்க.

திருவாளர் ஹண்டர் (W.W. Hunter) அவர்களின், “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” (A History of British India) என்ற நூலின் “லாங்குமென் கிரீன்” (Longmans Green & Co) பதிப்பையும் காண்க. (1919 ஆண்டுப் பதிப்பு: பக்கம். 23-25)