பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

111


பண்டைய மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பார்த்தியர்களும் (Parthians) இந்தியர்களும், உரோமப் பேரரசரோடு கடல் வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினர் எனச், சீனநாட்டுச் “சின்-ஷூ” (Chil-Shw) அரச இனத்து வரலாற்றுப் பதிவேட்டின் ஒருபகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், அதுபோலவே, கி.மு. 200 முதல் கி.பி. 220 வரை ஆட்சியில் இருந்த பிற்கால “ஹன்” (Han) இனத்து வரலாற்றுப் பதிவேட்டில் வரும் ஒரு பகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையைச் சேர்ந்த சிரியா, வாணிகத்தால் வளம் பெற்றது என்பதை உய்த்துணரவைப்பதன் மூலம், சீனநாட்டு வரலாற்று மூலமும் இதை உறுதி செய்கிறது. ஆக, பிளைனி அவர்களின் அறிக்கை நனிமிக உயர்ந்த மதிப்பீட்டை உறுதி செய்வதாகத் தெரிகிறது. (உரோமப் பேரரசுக்கும், இந்தியாவுக்கும், இடையிலான வாணிகம், (The Commerce between the Roman Empire and India) பக்கம் : 274-275)

6) உரோமுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் கடல் வாணிகம். .

மேலைநாட்டு கிரேக்க எழுத்தாளர்களிடமிருந்து பெறப்படும் அகச்சான்று, உரோமப் பேரரசின் முதல் மன்னனாகிய அகஸ்டஸ் என்பானின் கி.மு. 27 முதல், கி.பி. 14 வரையான ஆட்சிக்காலத்தில் சேர, பாண்டிய அரசுகளுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில் நிலவிய தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.

1) ‘ச’கரத்தின் மெல்லொலியாலும் இலங்கையர்களால், சேரர் என்பதற்கு ‘ஷேரி’ என்பது ஆளப்படுவதாலும், “ஷெரெய்” அல்லது சீனர்களாகக் குழப்பப்படுவதும், உரோமப்பேரரசனுக்கு