பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

113


காலத்திலேயே, தரம் குறைந்த உலோகத்தால் ஆன உரோம நாணயங்கள் இந்தியாவை அடைந்தன. தமிழ் நாடு முழுவதும், உரோமப் பேரரசின் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயிரம் ஆயிரம் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிறஅரசர் காலத்து நாணயங்களைக் காட்டிலும், அகஸ்டஸ், மற்றும் டிபெரியஸ் (Augustus and Tiberius) பேரரசர், சிறப்பாகப் பின்னவர் சின்னம் பொறித்த நாணயங்கள் பெருகிவிட்டன. கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன் வெஸ்பாஸியன் (Vespasian) காலத்தனவும். அவனுக்குப் பின் வந்த உரோமப் பேரரசர் காலத்தனவுமான உரோம நாணயங்கள் பெருமளவில் காணப்படவில்லை. ஏறத்தாழ 1898 ஆண்டளவில். புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பொன் நாணயங்கள், திருவாளர் “தர்ஸ்டன்” (Thurston) அவர்கள் பட்டியல்படி பின்வருமாறு:

அகஸ்டஸ் ஆட்சிக்காலம், 51 நாணயங்கள்
டைபெரியஸ் ” 193
காயஸ் ” 5
கிலாடியஸ் ” 126
நீரோ ” 123
வெஸ்பாஸியன் ” 5
ஒருசேமிப்பில் இருந்த மொத்தம் 510 நாணயங்கள்

இது போலவே, மதுரை மாவட்டம், கல்லியம் புத்தூர், பண்டைய நெல்சியண்டா (Neleynda) (பழைய சேரநாடு) ஆகிய கோட்டயம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், கருவூர் நெல்லூர். கிருஷ்ணா மாவட்டம் விணு கொண்டா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நீரோவுக்கு, முற்பட்ட பேரரசர் காலத்து