பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழர் தோற்றமும் பரவலும்


நாணயங்களுக்கும், நீரோவுக்குப் பிற்பட்ட பேரரசர் காலத்து நாணயங்களுக்கு இடையிலும் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தது. கி.பி. 193 முதல் 211 வரை ஆண்ட உரோமப் பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Septimius Severus) காலத்திற்குப் பிற்பட்ட காலத்து நாணயங்கள் காண்பதும் அரிதாம். 1800-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும், 1878-ல் கருவூரிலும், 1891-ல் பெங்களூருக்கு அருகில் யெஸ்வன்புதூரிலும் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயங்களுக்கு இடையிலும், எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு செய்து கூட, டைபெரியஸ் காலத்தில் அல்லது அகஸ்டஸ் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் தொடங்கிற்று. திரு. ஹிப்பாலோஸ் (Hippalos) அவர்கள் கி.பி 45-ல் பருவக்காற்று ஓட்டத்தின் விளைவைக் கண்டெடுக்கவே உரோம நாணயங்கள், கிழக்கு நாடுகள் நோக்கி, வடிந்து போவது குறித்து டைபெரியஸ் முறையிட்டுக் கொண்டான். பொன் நாணயங்களும் வெள்ளி நாணயங்களும், இந்தியாவின் மேற்குக் கரை வாணிக மையங்களில் வந்து கொட்டின. இதற்குப் பெரிய காரணம், தனக்கு முந்திய காலத்தில், இந்தியாவுக்குச் சென்ற நல்ல நாணயங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துமாறு வணிகர்களைத் தூண்டிவிட்ட நீரோ, நாணயச் செலாவணி மதிப்பைக் குறைத்துவிட்டதே தலையாய காரணம். தமிழ்நாட்டில், நீரோவுக்குப் பின்னர் வெள்ளி நாணயமே இல்லை. உரோமப் பேரரசின் பிற்பட்ட காலத்தை அடையும்வரை பொன் நாணயங்களும் காணப்படவில்லை. திருவாளர் சூவெல் (Sewell) அவர்கள், “பொன் நாணயங்கள் குவியல் குவியல்களாக ஆங்காங்கே புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன என்றால், பாண்டியப் பேரரசுக்கும் சோழப் பேரரசுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்ற போர்கள் காரணமாகவே தமிழ்நாட்டு வாழ்வை உரோமர் கைவிட்டனர் என்பதை மறுக்கிறார். பொன் நாணயங்கள், தமிழ்நாட்டில் நனிமிகக் குறைந்த அளவில் காணக்