பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழர் தோற்றமும் பரவலும்


வெள்ளைநிறக் கட்டைகளைத் தாங்கி, சிவனின் அடையாளச் சின்னமாகிய மூன்று பட்டைத் திருநீறு பூசப்பட்டிருக்கம்.

கடல் ஓடும் கப்பல்களில் உள்ள பாய்விரி கப்பல் மற்றும் கப்பல் ஒருபால் சாய்ந்து விடாதபடி காக்கும் பக்கவாட்டுச் சட்டம் ஆகியவற்றின் வடிவமைப்பு, “பொலினிஷிய” ஒருமைப்பாடு உடையதாகக் கொள்ளப்படுகிறது. அது எப்படியாயினும், அந்த ஒருமைப்பாடு, இந்தியாவுக்கு, பொலினீஷியாவுக்கும் இடையில் நடை பெற்ற வாணிக உறவைத் தாங்கியுள்ளது ஆந்திரா மற்றும் குறும்ப அரசர்களின் நாணயங்கள், ஒற்றைப் பாய்விரிதுலம் இல்லாமல் இரட்டைப்பாய்விரி கூம்புகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாம். மலேயா நாட்டுக் கப்பல்களுக்கு இடப்பட்டிருக்கும் பெயர் தமிழ்ச் சொல்லாகிய கப்பல் என்பதாம் என்பது நனிமிக வியத்தற்கு உரியது. மலேசிய மொழிகளில், தென்னிந்திய மொழி மூலத்தைக் கொண்ட எண்ணற்ற சொற்கள் உள்ளன. இவைபோலும் உண்மைகள், தென்னிந்திய நாகரீகம், கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவின என்பதை மேலும் உறுதி செய்கின்றன.

நனிமிகப் பழங்காலத்திலேயே, தமிழர் செல்வாக்கு எப்படியெல்லாம் உலகெங்கும் பரவியிருந்தது என்பதைக் காண்கிறோம். கண் பொறிக்கப்படுவது, பரிசில்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பது ஆகியனபோலும் தெளிவான நிகழ்ச்சிகள், அங்கும் ஒரே காலத்தில் தோன்றிய ஒருபோகு நிலையாம் என எளிதில் ஒதுக்கி விட முடியாது.

“வங்காளத்து ஆசிய சமூகத்தவர் நினைவுகள் (Memories of Asiatic Society of Bengal VII) என்ற தலைப்புள்ள திருவாளர் ஜே. ஹார்னெல் (J. Hornell) அவர்களின் கட்டுரையினைக் காண்க (பக்கம் 152-190; 216-227)