பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழர் தோற்றமும் பரவலும்


ஆயினும், அதன் வாழ்நாள், இறந்த நாளாக ஆகிவிட்டது என்றே கணக்கிடப்பட்ட வேண்டும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற பாளையக்காரர்களிடையிலான சண்டைகளில், அப்படைக்கலம் பெரும் பங்கு கொண்டது என மரபு வழிச் செய்தி கூறுகிறது.” (E. Thurston, Castes and Tribes of Southern India. Vol. I introduction p. xxviii-xxix.) .

“பண்டைய எகிப்து, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் தென்மேற்கில், மெக்ஸிகோவை அடுத்துள்ள அரிஸோனா (Arizono), புதுமெக்ஸிகோ, மற்றும் இத்தாலியின் மைய நாடாகிய எட்ருஸன் (Etruscan) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குவளைகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட கணக்கிலா அகச்சான்றுகளிலிருந்து, ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடையே, எதிர்பாரா நிலையில், தன்னாலேயே தோன்றியதோ, எந்த நிலையிலும், ஆஸ்திரேலிய மண்ணிலேயே தோன்றியதோ அல்லாமல், ஆசியப் பெருநிலப் பரப்பிலிருந்து, ஆங்கு முதன் முதலில் சென்று குடியேறியவர்களால் கொண்டு செல்லப்பட்ட தான வளைதடி, ஒரு வலுவான படைக்கலமாகவே மதிக்கப்பட வேண்டும். திரும்பி வந்துசேரும் ஆஸ்திரேலிய வளைதடிக்கே உரிய சிறப்பியல்புகளாகிய, அலகுபோலும் தட்டையாம் தன்மை, திருகு சுருள் போலும் முறுக்குகளைத் தென் இந்திய வளைதடி இழந்துளது. ஆஸ்திரேலிய வளைதடிகளில், பெரும்பாலன. திரும்பி வரும் வகையில் வடிக்கப்பட்டது அன்று. உண்மையில் திரும்பி வந்தடையும் வளைதடிகளைப் பெறுவது இப்போது அரிது. (E. Thurston Ethnographic Notes in Southern India. P. 555-6).

9) தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர் குடியேற்றம்.

இன்றைய இந்தோ சைனாவின் தென்பகுதி, மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில், மக்கள் குடியேற்றம், திருவாளர்