பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

125


(Sokoto) அடமவ (Adamawa) மற்றும் காண்டோ (Gando) ஆகிய இடங்களில் வாழும் மக்களில் பெரும்பாலனவராக உள்ள சூடான் நாட்டு ஹெளஸா (Haussa) மக்களிடையே, இன்றும் உள்ளன” என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, திருவாளர் “ஸ்டுட்டெர்ஹெம்” (Stutierem) அவர்களைக், கிழக்கு ஜாவா மக்களிடையே, எகிப்தியச் செல்வாக்கு இருந்தது என்ற முடிவினைத் தரச்செய்துள்ளது. ஆனால், நம்முடைய கொள்கைப்படி, எகிப்தியர் தாமும், இந்திய நாகரீகத்தால் இயக்கப்பட்டனர். ஆகவே, உலகத்தின் தொல்பழம் நாகரீகத்திற்குப் பொறுப்பாளி எகிப்து அன்று. இந்தியாவே (R.C. Majundar, Svarnadvipa. Vol, II. Part II, p. 283-84).

இந்தோனேஷியாவில் தென்னிந்தியச் செல்வாக்கு:

ஒரு சிற்றாய்வு:

புகழ்பெற்ற நாளந்தாப் பல்கலைக் கழகத் தலைவரும், காஞ்சியில், உயர்ந்த அரசுப் பணியாளரின் மகனாகப் பிறந்தவரும், அன்றைய பெரும் புலவர்களில் ஒருவராம் என்ற பெருநிலைக்கு உயர்ந்தவருமான தர்மபாலர், தம் கடைசி வாழ்நாட்களைச் சுமத்ராவில் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் அவர் தலைமை வகித்த காலத்தை, தொடக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (திரு. எச்.டி. சங்கலியா அவர்களின் நாளந்தாப் பல்கலைக்கழகம் என்ற ஆங்கில நூலைக் காண்க (பக்கம் 107-8) தர்மபாலர் நாளந்தா பல்கலைக் கழகத்தில் முப்பது ஆண்டுகாலம் பாடம் கற்பித்துவிட்டு, தம் வாழ்நாளின் இறுதியில் சுவர்ணபூமி சென்றடைந்தார். ஶ்ரீவிஜயத்திற்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய போக்குவரத்து ஏனைய அகச் சான்றுகளேயல்லாமல்,