பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

127


கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான, “போர்னியோ”வில் உள்ள “கோயிடெய்” (Koetie) என்னும் இடத்தில் காணப்படும் எழுத்து வடிவம், மகேந்திரவாடியிலும், தளவனூரிலும் உள்ள மகேந்திர பல்லவனின் குகைக் கல்வெட்டு எழுத்துக்களோடு ஒரு சார் ஒருமைப்பாடு கொண்டுள்ளது. .

இந்தியாவின் வடகோடியிலிருந்து தென் கோடிக்கும், அங்கிருந்து வங்காள விரிகுடாவைக் கடந்து மலேயத் தீவுகளுக்கும், அகஸ்தியர் குடிபெயர்ந்தார் என்ற சமயக் கோட்பாடு, மேலும் மேலும் ஆதரவு பெற்று வருகிறது. வாயு புராணத்தின்படி, திருவாளர் தீக்ஷிதர் அவர்களின், வாயு புராணத்தின் சில கூறுகள் (Some Aspects of Vayu Purana See. vii) அகஸ்தியர் ஜாவாவைப் போலவே பர்ஹினதீபா. (பெரும்பாலும் , போர்னியோ), குஷதீபா, வராஹதீபா, சாணக்யதீபா மற்றும் மலையதீபா ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார். ஓர் அகஸ்தியர், தென்னிந்தியாவைச் சேர்ந்த மலைய பர்வதத்திலிருந்து வேறுபட்டதான மலையதீபாவில் உள்ள மஹாமலைய பர்வதத்தின் மேல் ஓர் அகஸ்தியர் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சுமத்ராவில் உள்ள முக்கியமான ஒரு மலை, இன்றும் மலையமலை என்றே அறியப்படுகிறது. கிழக்கிந்தியத் தீவுகளுக்கு அகஸ்தியர் வருகை தந்தார் என்ற கற்பனைக் கதை, ஒருவேளை, இந்தியப் புண்பாட்டின் குடியேற்றத்திற்கு முந்திய, அதற்கு வழி வகுத்த தென்னிந்தியாவிலிருந்து அலைஅலையாக வந்த பிராமணப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னமாம் என வாதிடப்படுகிறது. ஜாவாவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிவன் கோயில், மற்றும் அங்கு, தென்னிந்திய அகஸ்திய கோத்திர பிராமணர் வழிவந்தவர் குடியிருப்பு பற்றிய அகச்சான்று எதுவும் இல்லை. அகஸ்தியர், இந்தோனேஷிய பிராமண நாகரீகத்தின்