பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழர் தோற்றமும் பரவலும்


இலக்கியம்” (Indian Literature in China and the Far East, p. 25- 26) என்ற நூலைக் காண்க.

சீனாவுடனான இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு:

தென்சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மற்றும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் கடல்வழித் தொடர்பு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே தொடங்கிவிட்டது.

கி.பி. 618 முதல் 907 வரை ஆட்சியில் இருந்த “டி-வாங்” (Tang) இனத்தவர் காலத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த கடல்வழி, பெரிதும் வணிகர்களாலும், சமயப் பிரயாணிகளாலும் பயன்படுத்தப்பட்டது. தொலைதூர இந்தியத் தீபகற்பமும் கிழக்கிந்தியத் தீவுகளும், இந்திய நாகரீகம் உடையவாக ஆக்கப்பட்டுவிட்டன. ஶ்ரீவிஜயன் பேரரசு, ஜாவா, நாட்டின் கலிங்க மாநிலம், ப்யூனன் அல்லது பண்டைய அன்னம் போன்றவை. இந்துப் பண்பாடு நிலவும் நாடுகளாம் என்ற உலகப் புகழ் பெற்றுவிட்டன. எங்கும் சமஸ்கிருதம் கற்கப்பட்டது. சீனச் சமயப் பிரயாணிகள், தங்களுக்குத் துணைசெய்யவும், தங்க இடந்தரவும் சமஸ்கிருத மொழி வல்லார்களைக் கண்டனர். சீன யாத்திரிகன் இட்சிங்க் கூட இந்த வழியாகவே வந்தான். கி.பி. 618 முதல் 799 வரையான காலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பெளத்த சந்நியாசிகள், இந்தியாவுக்கும், அதன் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றனர். ஏறத்தாழ 400 நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு, மொழி பெயர்க்கப்பட்டன. அவற்றுள் 300 நூல்கள் இன்றும் அழியாமல் உள்ளன. சமஸ்கிருத்திலிருந்து சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கடைசி நூல் கி.பி. 1280 முதல் 1368 வரை ஆட்சியில் இருந்த ய்யூன் அல்லது மொங்கோல் அரச இனத்து ஆட்சிக் காலத்தில்.