பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

131


12-13 இலங்கை அரசர்கள் முதல் இரண்டு சேனர்களுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நடை பெற்ற போர்கள்:

“பூஜாவலிய” என்ற நூலின்படி, பராக்கிரமபாபு என்ற பேரரசன் காலத்திலிருந்து பின் நோக்கிக் கணக்கிட்டவாறு, முதலாம் சேனன், தன்னுடைய ஆட்சியைக் கி.பி. 819-820-ல் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. அவன் காலத்தில், இலங்கைமீது, பாண்டியர் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. அந்நாட்டில் வாழ்ந்திருந்த தமிழ் இனத்தவர் அதில் சேர்ந்துகொண்டனர். அநுராதபுர நகரும்கூட அழிக்கப்பட்டது. ஆங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களாகிய புத்தரின் பல், மற்றும் கமண்டலமும் எடுத்துச்செல்லப்பட்டன என, பிற்கால வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், இதை உறுதி செய்யவல்ல வேறு அகச்சான்று எதுவும் இல்லை. சேனன். அநுராதபுரத்திற்குத் திரும்பி விட்டான். அமைதி நிலைநாட்டப்பட்டது.

இரண்டாம்சேனன் தன் ஆட்சிக்காலத்து ஒன்பதாவது ஆண்டில், அதாவது கி.பி.866-901-ல், அவன் படைத்தலைவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, மதுரையைக் கைப்பற்றி அழித்துவிட்டு, பாண்டிய அரசன் போரில் பெற்ற புண்ணால் இறந்து போகவே, பாண்டியர் குலத்தவர் எனச் சொல்லிக்கொண்ட ஒருவனை அரியணையில் அமர்த்தினான்.

ஐந்தாம் காசிபன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 929-939) இராஜசிம்மபாண்டியன், சோழர்க்கு எதிரான போரில் அவன் துணையை நாடினான். ஆனால், இந்தியாவுக்குச் சென்ற, சிங்களப்படை, வெற்றி காணாமல் திரும்பிவிட்டது. ஐந்தாம் தப்புலா காலத்தில் (940-952) கி.பி. 918-19 ஆண்டளவில்,