பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

133


முதலாம் சேனன் காலத்து இலங்கைமீது படையெடுத்துச் சென்றவன், ஶ்ரீவல்லப பாண்டியன் மகனாகிய வரகுண பாண்டியனாவன். முதல் இரண்டு சேனர்களும் தென்னிந்தியாவோடு கொண்டிருந்த உறவு பற்றி ஆண்டுகணிப்பு தொடர் வரலாற்றுக் குறிப்பும் பிறவும் தரும் செய்திகளின் பொருந்தாமை மற்றும் முரண்பாடுகள் குறித்துத் திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவன காண்க (The Pandiyan Kingdom.p. 70-71) ‘இலங்காபுரன் தலைமையில், இலங்கையர் வெற்றி’ பற்றி மகாவம்சம் கூறுவதையும் காண்க.

தமிழர்கள் மீது இலங்கை ஆதிக்கம்:

கி.பி.248 முதல் 551வரை அரசாண்ட ‘கோதப்ஹய்ய’ அரசன் காலத்தில் ஏற்கெனவே இருந்த வைதுல்யன் சமயக் குழுக்களுக்குத் துணையாக, ‘ஸஹல்ய’ எனும் பெயர் உடைய மூன்றாவது சமயக் குழு தோன்றிற்று. பெளத்த மதத் துறவிகள் அறுவர், அரசனால் நாடு கடத்தப்பட்டுக் கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறி, ஆங்குள்ள மக்களின் புரவுள்ளத்தால் நன்கு வாழ்ந்தனர்.

“யுஜூ” என்ற பழங்குடியின் புகழ்பெற்ற தமிழனாகிய எலா அரசன், சோழ நாட்டிலிருந்து இலங்கைமீது படையெடுத்துக் கி.பி. 105 முதல் 161 வரை அரசாண்டிருந்த அஸெல் அரசனின் அரியணையைக் கைப்பற்றிக்கொண்டு அந்நாட்டை நாற்பத்து நான்கு ஆண்டு காலம் நண்பர் பகைவர் எனப் பாராமல் நடுவு நிலைமை தவறாமல் நீதி வழங்கி ஆண்டான். அவன் புத்த சமயத்தைத் தாங்கிக்கொண்டது மட்டுமல்லாமல், அதன் நல்ல நண்பர்களுள் ஒருவனும் ஆனான்.

திருவாளர் எச்.கெர்ன் (H Kern) அவர்களின் “இந்திய புத்த மதம் பற்றிய சிற்றேடு” பக்கம் : 245; திருவாளர் ஜி டானோர்