பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழர் தோற்றமும் பரவலும்


(G. Tunoun) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் 3 திருவாளர் ‘கெய்கெர்’ (Gegar) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் : 27, “துட்டுஜென் மினா முதல் மகாஸேனா வரை” ஆகிய நூல்களைக் காண்க.

இலங்கை புத்த பிக்குகளும், ஏன் சாதாரண மக்களும் கூட இடையில் உள்ள கடலைக் கடந்து தென்னிந்தியாவுக்கும் அங்கிருந்து புத்தகயா வரை ஆறு திங்கள் நடந்து சென்றனர். வங்காளத்தில் உள்ள தமர-லிப்டெ என்ற ஊருக்கான அவர்கள் வழி கடல் வழியாகும். பிராமணர்கள் உறுதியாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். சிற்றூர்களுக்கு வெளியே குடி வந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பராக்ரமபாகுவிற்குப் பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற தமிழர் படை எடுப்புகளும் ஆட்சியைக் கைப்பற்றுதலும் இலங்கை கிறிஸ்துவர் கோயிலின் ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டன. 13ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தம்பெதெனிய்யாவிலிருந்து ஆட்சி புரிந்த கலிகால சாகித்திய பண்டித பாகேசர மகாபிரபு அக்கோயிலை அதன் பழைய நிலையில் கொண்டு நிறுத்தினான். அவன் சோழ நாட்டிலிருந்து புத்த பிட்சுக்களை அழைத்து வந்து புத்தப் பள்ளிகளையும், பர்வீனாக்களையும் நிறுவிக் கற்றலை ஊக்கப்படுத்தினான். இது, அந்த நூற்றாண்டில், தமிழகத்தில் புத்த மதம் அடியோடு மறைந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. 14. வட இலங்கையில் தமிழ் அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:

இபன்-பதுதன் என்ற அராபியன் கி.பி. 1344ல் வடஇலங்கைக்கு வருகை தந்தான். புட்டாலம் துறைமுகம் உட்பட, அத்தீவின் வடபகுதி, யாழ்ப்பாண அரசன் ஆரிய சக்கரவர்த்தி