பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

135


என்பான் ஆட்சிக்கீழ் இருப்பதைக் கண்டான். அந்த அரசு, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் தனிநாடாக ஆயிற்று. ஆரிய சக்கரவர்த்திகள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் அதன் அரசர்கள், கங்க வம்சத்தவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டனர். அவர்கள் பதினான்காம் ஆண்டின் பிற்பாதி வரை நல்ல செல்வாக்கோடு இருந்தனர். பின்னர், விஜயநகர அரசுக்கு அடங்கிய சிற்றரசாயினர். பிற்காலப் பாண்டியர்கள். தங்களை ஜடாவர்மன், மாறவர்மன் எனவும், சோழர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி எனவும், மாறிமாறி அரியணை ஏறியதற்கேற்ப் அழைத்துக் கொள்ளுமாறு, அக்காலத்து யாழ்ப்பாணத்து அரசர்களும், அரியணை ஏறும் முறைக்கு ஏற்பத் தங்களைப் பரராஜசேகரன் என்றும் ஜெகராஜ சேகரன் என்றும் அழைத்துக்கொண்டனர். ஐரோப்பிய டச்சு நாட்டுப் பயணி வாலெந்தியன் என்பான் கன்னட நாட்டவர் படையெடுப்பு ஒன்றைக் குறிப்பிட்டுள்ளான். அக்கன்னடியர் பெரும்பாலும் விஜயநகர மக்களாவர் கி.பி. 1591-ல் யாழ்ப்பாணத்து அரசன் போர்த்துகீஸியர் ஆட்சிக்கீழ் எனத் தம்மைக் கூறிக் கொண்ட தஞ்சை நாய்க்கர்கள் அவ்வியாழ்ப்பாணத்து அரசை உயிர்ப்பிக்கப் பயன் அற்ற முயற்சிகளை மேற்கொண்டனர் என்றாலும், 1819ல் ஆளும் அரச இனம் பதவி இறக்கம் செய்யப்பட்டது.

கி.பி 1656ல் தஞ்சை இரகுநாத நாய்க்கன், யாழ்ப்பாணத்து அரசர்களைக் காக்க விரும்பி மன்னார் வளைகுடாவைச் சங்கிலிபோல் நின்ற படகுகள் மூலம் கடந்தான்.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்ட திருவாளர் மயில்வாகனப் புலவர் அவர்களின் “யாழ்ப்பாண வைபவ மாலை” என்ற நூலையும் பாதிரியார் எஸ். ஞானப் பிரகாசர் அவர்களின், “போர்த்துகீஸியர் காலத்தில் யாழ்ப்பாணம்” என்ற