பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழர் தோற்றமும் பரவலும்


ஆங்கில நூலையும் திரு. ராஜநாயகம் அவர்களின் “பழைய யாழ்ப்பாணம்” மற்றும் “யாழ்ப்பாண வரலாறு” என்ற ஆங்கில நூல்களையும் காண்க.

15. கரியன்கள் : (சிற்றாசியாவின் தென்மேற்கில் வாழ்ந்த பழங்குடியினர்):

கிரேக்க வரலாற்று ஆசிரியன் ஹெர்ரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் கூற்றின்படி, கரியர், தீவுகளிலிருந்து உள்நாட்டிற்கு வந்தவராவர். கரியர் என்ற சொல், சேர அல்லது கேர என்ற சொல்லில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லவா?

கரியன்கள் தங்கள் தலைக்கவசம் மற்றும் கேடயங்களைப் பறவைகளின் சிறகுகளோடும் கைப்பிடிகளோடும் கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களின் படைக்கலன்கள், சிற்றாசியாவைச் சேர்ந்த கிரேக்கக் குடிவாழ்நராகிய எல்லெனிக் (Hellence) மக்களின் படைக்கலங்களைவிடச் சிறந்தன என நம்புகிறார் ஏதன் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர் திருவாளர் துசிதிதெஸ் (Thudydides) அவர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்திலேயே, கரியன்கள், வளம் தரும் படை கிரேக்கப் பழங்கதையாகிய ‘இலியட்’ (Iliad), உலோகம், தந்தம், மற்றும் தோல்களில் கைவினைப் பொருட்கள் செய்யும் அவர்களின் பழக்கத்தைக் குறிப்பிடுகிறது. பிற்கால வரலாற்று ஆசிரியர்கள், விலை உயர்ந்த கற்களைச் செதுக்குதல், கருஞ்சிவப்பு வண்ணம் தோய்த்தல் போலும் அவர்கள் கைத்திறனைக் குறிப்பிடுகின்றனர். பத்துப் பத்தாக எண்ணும் எண்ணுமுறை, கப்பல் கட்டுதல் தொழில் மேம்பாடு; இசையில் மெருகேற்றல்; புதிய கரங்களைக் காணல், எழுதுகோல் காணல், தானியங்களை அறைக்கும் பொறிகளில் சில முன்னேற்றம் ஆகியவற்றில் அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்றனர் டாக்டர்