பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழர் தோற்றமும் பரவலும்


எழுதுவதற்கு மேற்கு ஆசியா மற்றும் அண்மைக்கிழக்கு நாடுகளில் ஆட்சியில் இருந்த எழுத்து வடிவங்களின் காலத்தனவும், அவற்றோடு, தெளிவான ஒருமைப்பாடுடையவுமான, ஆனால், இந்தியாவுக்கே உரியவுமான ஓர் எழுத்து வடிவை ஆண்டனர். திருவாளர் ஜான்மார்ஷல் அவர்களின் “சிந்துநதி நாகரீகம்; மற்றும் திருவாளர் எம்.எஸ். வாட்ஸ் அவர்களின், ஹரப்பா அகழாய்வு என்ற நூல்களைக் காண்க. (Ref : to John Marshal Indus Civilization. M.S. Vats. Excavations at Harappa. Vol : I page 5-6)

18) திருவாளர் ஓ.ஜி.எஸ் க்ராபோர்ட் அவர்களின் “தொல்பழங்காலம்” பகுதி 6 பக்கம் : 259 (O.G.S. Crawbord Antiquity VI 259) நீலகிரியில் கண்டெடுக்கப்பட்ட, கிரேக்க நாடோடிப் பாடல்களில் இடம்பெறுவதும், ஒருவகைப் பச்சைக்கல்லால் ஆனதுமான ஜெபமாலைகள், சுமேரியாவில் ஓடும் யூபிரடஸ் ஆற்றங்கரை நகராகிய உர் (Ur) நகரில் ஊழிப் பெருவெள்ளத்திற்கு முந்திய வண்டல் படிவங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எகிப்தில், பச்சை நிற மணிக்கல்லால் வைடூரியம், முடியாட்சிக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

19) இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு, ஆண்டு அறிக்கை, 19-2-3; usgib: 120 (ArchSurvey ofIndiaAnnual Repport 1902– 3 p. 120)

20) திருவாளர் ஈர்னெஸ்ட் மக்கே (Earnest Mackay) அவர்கள், “மெஸ்படோமியாவில் கண்டெடுக்கப்பட்ட ஜெபமாலை மணிகள், இந்திய மூலம் வாய்ந்ததே என்ற உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். (J.R.A.S. for 1926 p. 696 701.) தென்னிந்தியாவில் சேலம் மாவட்டத்திற்கு