பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

143


சீனாவில் அதற்கும் முந்தி இல்லை என்றாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணக்கூடும். கி.மு. 140 முதல் 137 வரை ஆண்ட பேரரசர் “வு” (Wu) அவர்கள் ஆட்சிக் காலத்தில், வானையும், நிலத்தையும், வழிபடும் சமய நெறி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரண்டு இயற்கைகளை வழிபடும் வழிபாட்டு நெறி சீன, சமயத்தின் தலையாய உயிர்ப் பண்பாகக் கருதப்பட்டது.

மத்திய இந்தியாவைச் சேர்ந்த “ஓரஓனியா” (Oraons) மற்றும் ஏனைய பழங்குடியினரிடையே “தஹர்திமை” (Dharti Mai) வழிபாடு பெருவழக்காய் நிலைபெற்றிருந்தது. நிலத்தாயின் வளத்தைப் பெருக்குவதற்காகக் காலம் தவறா விழாக்களும் இருந்தன. அவ்விழாவில், மனித பலியும் உண்டு. பெரும்பாலும் அது ஒரிஸ்ஸா நாட்டு கோண்ட் பழங்குடியினரிடையேதான்.

வட அமெரிக்காவைச் சேர்ந்த சிவப்பு இந்தியர்களிடையே, நிலத்தைத் தங்கள் தாயாக உருவகப்படுத்தும் பழக்கமும், தங்கள் முதல் மூதாதையர் தாயின் கருப்பையிலிருந்து குழந்தைகள் பிறத்தல் போல, நிலத்திலிருந்து பிறந்தனர் என்ற நம்பிக்கையும் இருக்கும் போது, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போபோஸ் (BoBos) எனும் இனத்தவர் போலும், ஆப்பிரிக்கரிடையேயும், நிலத்தாய் வழிபாடு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. வட அமெரிக்க மெக்ஸிகோ நாட்டவரும், நனி உயர்ந்த நாகரீகம் வாய்ந்தவருமான “அஸ்டி” (Aztees) இனத்தவரிடையே, நிலத்தாய்தான், கடவுள்களுக்கெல்லாம் தாய் ஆகும். மத்தியத் தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் (Crete) உள்ள, தாய்க் கடவுளின் சுடப்பட்ட சிறு உருவ மண்சிலை, மொகன்ஜாதாரோவில் கண்டெடுக்கப்பட்டதை, அப்படியே முழுமையாக ஒத்துளது. திருவாளர். ஒசி கங்கோலி (Gangoly)