பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

147



கடல் தெய்வமாம் 'பொசெஇடொனுக்கு'க் (Poseidon) காளைமாடுகள் தொடர்ந்து பலி கொடுக்கப்பட்டு, தெய்வீக அகத் தூண்டுதல் பெறுதல் பொருட்டு, அதாவது தன்மீது தெய்வம் ஏறற் பொருட்டு, பெண் பூசாரியால், அதன் குருதி குடிக்கப்பட்டது. இடி கடவுளின் மரபுச் சின்னமாக, ஞாயிற்றின் அடையாளச் சின்னமாக, ஒரு வகை, இழந்த ஆற்றலை அளிப்பதாக அது பார்க்கப்பட்டது. சிற்றாசியாவிலும், சிரியாவிலும் கி.மு. 2000-700 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்திருந்தவராகிய "ஹிட்டிட்டெஸ்" (Hittites) மக்களிடையே, இடி மற்றும் செழிப்பின் சின்னமாக அது வணங்கப்பட்டது தந்தை தெய்வத்தின் சின்னமாக மதிக்கப் பட்டது. "சிபெலெ" (Cybele) மற்றும் "அட்டிஸ்" (Attis) என்ற கிரேக்க இயற்கைக் கடவுள்களை வணங்கும் சமய வழிபாடுகளில் அதன் ஆண்குறி பயன்படுத்தப்பட்டது.

காளைமாடு நவதானியச் சிறு தெய்வத்தைச் சுட்டிக் காட்டித் தென் ஆப்பிரிக்க நெட்டாலில் முதல் பழ அறுவடையின் போது நடைபெறும் ஜூலு (Zulu) விழாவில் பலி கொடுக்கவும் பட்டது. பண்டை எகிப்தில் அது பலி ஆடாக ஆக்கப்பட்டது. பண்டைப் பர்ஷியாவின், நளி, உண்மைகளின் கடவுளாம் "மித்ரா" (Mithra)வை வழிபடும் சமய நெறியில், காளைமாடு ஒரு முக்கியமான பொருளாம். புதுப்பழ விழாக் காலத்தில் காளைச்சண்டை, உடற்பயிற்சி விளையாட்டுகள், விழாக்காண வரும் மக்களுக்கு மனமகிழ்ச்சி அளித்தன. - :

31) திருவாளர் ஜி. க்லோட்ஸ் (G. Giots) அவர்களின், “ஏஜியன் நாகரீகம்" {The Aegean Civilization, (Kegan Pawl. 1925) Page , 293-5} என்ற நூலைக் காண்க. கிரீட் நாட்டில், ஏறு தழுவுதல் தேசிய விளையாடல்களில் ஒன்று. பக்கம் 295-ல் ஓர் அழகிய விளக்கப்படமும் உளது.