பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழர் தோற்றமும் பரவலும்



திருவாளர், ஏ.ஏ. த்ரேவர் (A.A. Trever) அவர்களின், "தொல்பழங்கால அண்மைக் கிழக்கு மற்றும் கிரேக்கம்" (The ancient Near East and Greece page : 123-8) என்ற நூலையும் காண்க.

32) "கெரெத்தி" (Kerethi) அல்லது "செரெத்திம்" (Cherethim) என்ற சொல், மத்திதரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் வழங்கப்பபெறும் மொழியில் விவிலிய நூலின் கிரேக்க மொழி நடையில் "கிரெடன்" (Cretan) என்ற சொல்லுருவில் மாற்றி வழங்கப்பட்டுளது. பாலஸ்தீனியக் கடற்கரை வாழ்வாரிடையே. அவர்கள் கிரீட்டன் நாட்டவர் வழிவந்தவர் என்ற மரபுவழிச் செய்தி ஒன்றும் உள்ளது. கிரீட்டன் நாட்டவர் தாமும், சிரியா மற்றும் பாலஸ்தீனிய மக்களோடு தொடர்புடையவர் ஆதல், பெரும்பாலும், இயலக் கூடிய ஒன்றாம்.

இந்தக் கெரெத்தி மக்களுக்குத் தென்னிந்தியக் கிராடஸ் மற்றும் காட்டுமிராண்டிப் பழங்குடியினர்களோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது வாதத்திற்குரிய பொருளாம். கிரேக்கம், தன் பண்பாட்டு நிலைக்குக் கிரீட் மற்றும் சிற்றாசிய நாடுகளுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. இவர்கள், தங்கள் பண்பாட்டிற்கான அகத் தூண்டுதலை எகிப்து, மற்றும் சுமேரிய நாடுகளிலிருந்தே பெற்றிருக்க வேண்டும். வடஆப்பிரிக்காவில் மத்திய தரைக் கடலையொட்டி உள்ள துனிஸியா (Tunisia) தன் பண்பாட்டிற்கு இந்தியாவுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. நாகரீக வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்கினை எகிப்து ஆளவில்லை என்ற கருத்து கொண்டுள்ளார், திருவாளர் "வாட்டெல்" (Waddel) அவர்கள்.

33) திருவாளர் ஆர். ஜி. பந்தர்கார் அவர்களின் வைஷ்ணவம், Gசைவம் மற்றும் சிறு சமயங்கள் (Vaishnavism Saivism and