பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழர் தோற்றமும் பரவலும்



36) எகிப்தில் உள்ள அட்டி (Attis) இனத்துப் பூசாரிகளின் சின்னமும், நவதானியத் தெய்வமும் கோழிச் சேவலாம். அது அறுவடைக் காலத்தில் பலியிடப்படும். கிரேக்க உரோமப் பழங்கதைகளில் வரும் (Apollo) கடவுள், தமிழ் முருகன் போலவே.இளமைக் கடவுளாம். இளமை, அழகு, ஆற்றல்களின் அடையாளமாம்.

37) இந்தோ-ஐரோப்பிய இனம் மக்கள் ஆகியவற்றின் பிறப்பு மூலம். (The Origin of the Indo European Races and Peoples: 1935) என்ற திரு. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நூலைக் காண்க.