பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழர் தோற்றமும் பரவலும்



வரையான ஊழி. இங்கிலாந்து நாட்டில், இங்கிலாந்து வடமேற்கில் உள்ள வாலெஸ் (Wales) மாவட்டத்துக் காம்பிரியன் (Cambrian) பகுதியில் உள்ள அழிந்து போன இடிபாடுகளில் காணலாம் மடிந்துபோன, நீர் வாழ்வன மற்றும் செடி கொடிகளின் தொல்வடிவம் கொண்டு மதிப்பிடப்பட்ட ஊழி.

5. சிரிடேசியஸ் ஊழி (Cretaceous Era)

ஆர்க்கேயன் என்ற முதல் ஊழிக்குப் (Archeo Zoic) பிற்பட்ட்தும், மெஸ்ஸோ ஊழிக்கு (Meso Zoic) முற்பட்டதுமான, செரோ ஊழியின் (Cero Zoic) மூன்று பிரிவுகளில் கடைசி காலப் பிரிவு தொடக்க நிலை. பாலூட்டி உயிரினங்களும், மலர்ச் செடிகளும் தோன்றியதும், வெண் சாக்குப் படிவங்கள் உருவாகியதுமான காலப் பிரிவு.

6. சைலூரியன் ஊழி (Silurian Era) :

ஊர்வனவற்றுள் முதலாவதான தேள் தோன்றிய காலம். மீன் உருவத்திற்கு முந்திய ஊழி. கடலடிப் பவழப் பாறைகள் உருவான காலம். மூன்றரைக் கோடி ஆண்டு வயதுடையது.

7. ஜுராசிக் காலப் பிரிவு (Jurassic Period)

ஆர்க்கேயன் ஊழிக்கு (Archaean Zoic) மூன்று பிரிவுகளுள், இரண்டாவது பிரிவு. கொம்பு போன்ற மூன்று புடைப்புக்களை, கொண்டையில் கொண்ட விலங்குகளில், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய காலம்.

8. திராயிக் காலப் பிரிவு (Triassic Period)

ஆர்க்கேயன் ஊழிக்குப் (Archaean 2oic) பிற்பட்டதான கடைப்பேருழியாம் மெஸ்ஸோ ஊழியின் (Mess Zoic) மூன்று பிரிவுகளும், முதலாவது பிரிவு. ஊர்வனவும், சின்னம் சிறு