பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழர் தோற்றமும் பரவலும்



பாறைகளும், உருவான காலம். நிலத்திலும், நீரிலும் வாழ்ந்த உயிரினங்களும் ஆதிக்கம் பெருகிய காலம்.

12. ப்ரொடெரோ ஜோயிக் (Protero Zoic)

முதல் பேருழியாம் ஆர்க்கேயன் (Archaean) ஊழியை அடுத்தும், பலெயோ ஜோயிக் (Paleo Zoic) ஊழிக்கு முன்னரும் ஆன ஊழி. வேரில்லாக் கடற்பாசிகளும், பனிப் பாறைகளும் உருவான காலம். மண்ணுக்கடியில் இரும்பு, செப்புப் படிவங்கள் உருவான காலம்.

13. மெஸ்ஸோ பேரூழியாம் இடைப் பேருழி (Meso Zoic)

தொல் பேருழியாம் பாலியோ ஊழியாம் முதல் ஊழிக்குப் (Paleo Zoic) பிற்பட்டதும், திரயாஸிக் (Trassic),ஜூராஸ்ஸிக் (Jurassic) கிரெட்டாசியாஸ் (Cretaceous) என்ற மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பால் ஊட்டிகள் பெருகியதும், ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன, செரோ ஜோயிக் (Cere Zoic) என்ற ஊழிக்கு முந்தியதுமான, இடைப் பேருழி.