பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இணைப்பு 2



இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்


- 1. அகஸ்டஸ் (Augustus) உரோமப் பெருவீரன் சூலியஸ் சீசரின் வழிவந்தன. கி.மு. 27 முதல் கி.பி.14 வரை, அரசாண்ட பேரரசன்.

2. அகேயன் (Achean): ஐரோப்பாவில், தென்மேற்கு ஜெர்மானியிருந்து கிழக்காக ஒடிக் கருங்கடலில் கலக்கும் டான்யூப் ஆற்றுப்பகுதியாம் வடக்கிலிருந்து வந்து, கி.மு. 1300ல், கிரீஸில் குடியேறிய தொல்பழங்குடியினர்.

3. அஸ்லிரியன் (Assyrian): மேற்கு ஆசியாவில், கிழக்குத் துருக்கி, சிரியா, இராக் நாடுகள் வழியாக ஒடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்பிரடஸ் ஆற்றோடு, தென் துருக்கி, இராக் நாடுகள் வழியாக ஓடி வந்து கலக்கும் டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியில், இந்தியா முதல் எகிப்து மற்றும் சிற்றாசியா வரை பர்வியிருந்த ஒரு பெரிய நாட்டின் தலைநகராகக் கி.மு. ஏழாவது நூற்றாண்டில் விளங்கிய அஸ்ஸிரிய நகரத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள், வழங்கிய மொழி, மற்றும் அவர்கள் பண்பாடு.

4. அஸ்லீட்(Assiut): மத்திய எகிப்தில் உள்ள ஒரு நகரம்.

5. அட்டிஸ் (Attis): எகிப்து நாட்டில் இருந்த ஒரு பழங்குடியினர்; அவர்கள் மதகுருவின் சின்னம் சேவற் கோழி.