பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

161



பழங்குடியினர்: அவர்களின் மொழி. இந்தோ - ஐரோப்பிய மொழியோ, செமிடிக் இன மொழியோ அன்று. ஜார்ஜியன் மற்றும் காகேஸியன் மொழி இனத்தைச் சேர்ந்தது.

48. கட்டிகரா (Katigara) தென்சீனக் கடலில் உள்ள வியட்நாமின் ஒரு பகுதியாய், சைகோன் நகரைத் தலைநகராகக் கொண்டது. கொச்சின் சைனா (Cochin-china) எனவும் அழைக்கப்படும் நாடு.

49. கர்நக் (Karnak) எகிப்தில் ஒடும் நைல் நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றுார்.

50. கரியன்கள் (Carians) சிற்றாசியாவில் தென்மேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாடு.

51. கலட்(Kalat) தென்மேற்குப் பாகிஸ்தானின் ஒரு வருவாய்க் கோட்டம்.

52. கனட்டே (Khan-ate) ஓர் அரசன் அல்லது அதிகாரியின் ஆட்சிக்கு உட்பட்டநிலப்பரப்பு: அதாவது வருவாய்க் கோட்டம்.

53. கிஷ் (Kish) பாபிலோனியாவில உள்ள தொல் பழங்காலச் சுமர் நாட்டில் இருந்த ஒரு நகரம்.

54. க்யோ-கெள (Kiao-Chow) கிழக்குச் சீனாவில் உள்ள ஒரு நகரம்.

55. கிரீட் (Crete) மத்திய தரைக்கடலில் உள்ள ஒரு கிரேக்கத் தீவு.

56. கிரோனஸ் (Cronus) கிரேக்கப் பழம் புராணத்தில் உரானஸ் என்பான் மகனாய்ப் பிறந்து, தந்தையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டவனும், அவன் மகன் ஜெயஸ் என்பானால் பதவி இழக்கப்பட்டவனும் ஆவன்.