பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழர் தோற்றமும் பரவலும்



தெற்கில் இருந்த லிசியா (Lycia)வுக்குத் தம் நூலில் இட்டு வழங்கிய வேறு ஒரு பெயர்.

96. ஸோபரா (Sopara) பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பழைய துறைமுகம்.

97. ஸ்ட்ராபோ (Strabo) கி.மு. அல்லது கி.பி. யில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு நில நூல் வல்லார்.

98. ஸ்லாவோனிக் (Slavonic) ஐரோப்பிய யுகோஸ்லாவியா நாட்டுக்கு வடக்கில் பால்கன் என்ற உள்நாட்டுக் கடல் பகுதியில் உள்ள நாடு; அந்நாட்டு மக்கள்.

99. ஜுலுஸ் (Zulus) ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர்; அவர்கள் வழங்கும் மொழி.

100. டிமெடெர் (Demeter) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் உழவு மற்றும் பயன் அளிக்கும் கடவுள்.

101. டிராப்பியன் (Trappian rock) ராக் ஒரு வகை அடுக்குப் பாறை.

102. டாரியஸ் (Darius) கி.மு.588 முதல் 486 வரை பர்ஷிய நாடாண்ட அரசன்.

103. டெல்பி (Delphi) கிரீஸ் நாட்டின் நடுப்பகுதியில், தெய்வ வாக்குக் கூறப்படுவதாகப் (அதாவது குறி சொல்லப் படுவதாக) புகழ் பெற்ற பழம்பெரு நகர்.

104. டேடன் (Dedan) பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று.