பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

167



105. டொங்-கிங் (Tong-King) பிரென்சு-இந்தோ சீனாவின் பழைய மாநிலம். கி.பி. 1946-ல் வியட்நாம் நாட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது.

106. டொமிடியன் (Domitian) கி.பி.31 முதல் 96 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.

107. டோடொனா (Dodona) தொல் பழங் கிரேக்க நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருந்த பழம்பெரும் நாட்டில், சீமை ஆல் அல்லது கருவாலி மரங்கள் நிறைந்த சோலையில் யூதர்களுக்குத் தெய்வ வாக்குக் கிடைக்கும் இடமாகப் புகழ் பெற்ற ஒரு நகரம்.

108. ட்ரோஜன் (Trojan) வடமேற்குச் சிற்றாசியாவில் இருந்த தொல் பழம் நகராகிய டிராயில் (Troy) இருந்த தொல் பழங்கால மக்கள். பண்டைக் கிரேக்க வீரகாப்பியக் கதைக் களமாய்த் திகழ்ந்தது டிராய் நகர். "பிரியம்" என்ற அரசன் மகள் பாரிஸ் என்பவனால் கடத்தப்பட்ட மெனெலாயஸ் (Menelaus) மன்னன் மனைவி ஹெலன் (Helan) என்பவனை மீட்பதற்காகக் கிரேக்கர் தொடுத்த போர் நடந்த இடமாகும்.

109. டெளடோனிக் (Teutonic) வட ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மானியர் உட்பட உள்ள தொல் பழங்குடியினர்.

110. டைகிரீஸ் (Tigris) துருக்கி மற்றும், இராக் நாடுகளில் ஓடி, யூப்பிரடஸ் ஆற்றோடு அது, பாரசீக வளைகுடாவில் விழும் முன் கலக்கும் ஒர் ஆறு.

111. டெர்மிலோயி (Termiloi) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் அவர்களால், தென் ஆசியாவின் தெற்கில் இருந்ததாகக் கூறப்படும் ‘சொலிமி’ (Solimi)யை அடுத்திருந்த ஒரு நிலப்பகுதி.