பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழர் தோற்றமும் பரவலும்



132. பாக்ட்ரியன் (Bactrian) இன்றைய ஆப்கானிஸ்தானத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த தொல்பழம் நாட்டின் மக்கள், அவர்கள் பண்பாடு.

133. பாபிலோனியன் (Babylonian) தென்மேற்கு ஆசியாவில், துருக்கி, சிரியா, இரான் வழியாக ஓடிக் கருங்கடலில் கலக்கும் யூபிரடஸ் ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள தொல் பழம் பேரரசு நிலவும் நாட்டு மக்கள் மற்றும் அம்மக்கள் நாகரீகம்.

134. பார்த்தியன்ஸ் (Parathians) இராக் இரான் நாடுகளுக்கு வடக்கில் உள்ள காஸ்பியன் என்ற உள்நாட்டுக் கடலுக்குத் தென்கிழக்கில் இருந்து தொல் பழங்கால நாடும் மக்களும்.

135. பாலி (Bali) கிழக்கிந்தியத் தீவுகளில், ஜாவாவுக்குக் கிழக்கே உள்ள ஒரு தீவு.

136. பாலிஒண்டாலஜி (Paleontology) மர இனம், மா வினங்களின் அடிப்படையிலான நிலஇயல் ஆய்வின் படி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து நிலையைக் கணிக்கும் அறிவு.

137. பாலினெஸ் (Balinese) பாலி நாட்டு மக்கள் அவர்கள் பண்பாடு.

138. பிரிட்டிஷ் நிம்ராட் (British Nimrod) தென்மேற்கு ஆசியாவில் யூபிரடஸ் ஒட்டிய சுமேரிய நாட்டு நகரங்களில் ஒன்று.

139. (அ) பிலின்ட் சில்லுகள் (Flint Flakes) மத்திய பாலியோ - லிதிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முனைகள் சீர் செய்யப்பட்ட தொழில் செய்கருவிகள். ஐரோப்பாவில், மத்திய கற்காலத்தில் சீர்செய்து செதுக்கப்படா நிலையிலேயே பயன்படுத்தப்பட்டன.