பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

173



160. முஸ்காட் (Muscat) அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் உள்ள ஒமன் வளைகுடாவை அடுத்து உள்ள ஓமன் நாட்டுத் தலைநகர்.

161. மெக்ஸிகோ (Mexico) வட அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள நாடு.

162. மெம்பிஸ் (Memphis) எகிப்தில் நைல்நதி, மத்திய தரைக் கடலோடு கலக்குமிடத்தில் உள்ள தொல் பழங்கால நகர். ஒரு காலத்தில் எகிப்தின் தலைநகராகவும் இருந்தது.

163. மெர்கா (Merca) இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடாவை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள டோமாலி நாட்டில் உள்ள ஒரு நகரம்:

164, மெஸபொடாமியா (Mesopotamia) தென்மேற்கு ஆசியாவில், டைகிரிஸ், யூபிரடஸ் ஆறுகளுக்கு இடையில் இருந்த தொல் பழம் நாடு. இன்றைய இராக் நாடு.

165. மித்திராயிச் சமயம் (Mithraic Religom) பர்ஷிய நாட்டில், தொல் பழங்காலத்தில் இருந்த ஒளி, உண்மைகளின் கடவுளாகக் கருதப்பட்ட மித்ராவை வழிபடும் சமயம்.

166. மெலனேஷியா (Melanesia) தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி (Fiji) தீவு உள்ளிட்ட தீவுக் கூட்டம்.

167. மேகாலித் (Megalith) வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்காலத்தில், நினைவுச் சின்னங்கள் அல்லது கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டபெரிய பாறாங்கல்.

168. மோன்-க்மெர் (Mon-Khmer) இந்தோ சீன நாட்டில் வழங்கும் மொழிக் குடும்பம்.