பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

7



வளர்ச்சியில் அவர்கள் பங்கு, பெரும்பாலும் வில்லும், அம்பும். அவர்கள் வழிபாட்டு நெறி, முதிர்ந்த வழிபாட்டு நெறியாம் மரவழிபாடாம். அவர்கள் ஆஸ்திரேலிய ஆதிமுன்னோரால் இடமாற்றம் செய்யப்பெற்றனர் (குறிப்பு: 8 காண்க). களிமண் கலங்களை வாழ்க்கையில் மேற்கோடல், நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. நாகரீக வளர்ச்சியில் அவர்கள் பங்காகக் கருதப்படுகிறது. தாக்கிவிட்டுத் திரும்பும் வளைதடி, கணை, குண்டு ஆகியவைகளை விசைத்து எறியும் ஊதுகுழல், இனமரபுச்சின்னம் அணிதல், ஆகியவை அவர்கள் உடையவாகக் கருதப்படுகின்றன. அடுத்து வந்தது, மத்தியதரைக்கடல் மனித இனம். இந்தியமக்களின், குறிப்பாகத் தென் இந்திய மக்களின் உடல் அமைப்பிற்கும், தென்னிந்திய நாகரீக முதிர்ச்சிக்கும் பெரும் பொறுப்பு, இவ்வருகையே. உழவுக் கலையும், கடல் கடக்கும் கலையும் அவர்களோடு வந்தன. இது மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியிலிருந்தது. அவர்களோடு, அர்மீனிய இனத்தவர் கலந்துவிட்டனர். திருவாளர் தர்ஸ்டன் (Thurstorn) அவர்கள் கருத்துப்படி, அர்மீனியர்க்கே உரிய மண்டை ஓடு, தென்இந்திய இந்தியரின் மண்டை ஓடு போல் உளது (Castes and Tribes of South India Vol. 1) மத்தியதரைக்கடல் இன இயல்பும், அர்மீனிய நாட்டு இன இயல்பும் கலந்த இக்கலவை, தமிழர்களிடை, குறிப்பிடத்தக்க அளவில் காணக்கூடியதாம். கடைசியாக எழுதிய திரு. டாக்டர் குகா அவர்கள் (Dr. Guha) தெலுங்கு மொழியை, மத்தியதரைக்கடல் மொழியோடு இனம்கண்டு, குறுகிய தலையுடைமை கலப்பு, தமிழ்நாடு வரையே பரவியுளது. ஆந்திரதேசம் வரை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

சற்றும் சோர்வுற்றுப் போகாத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், சிந்துவெளிப் பள்ளத்தாக்கின்