பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

11


மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு 10 : காண்க). வலுவற்ற எதிர்பாராச் சொல் வழங்கலாம். “டிரெமிலே” என்பதை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் திராவிடர், கிரேக்கத்திற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட நாடாம் ஏஜியன் (Aegean) மக்களின் ஒரு பிரிவாம்-என வாதிடப்படுகிறது. தமிழர் நாகரீகம், அகழ் ஆய்வுச் சான்றுகளின் அடிப்படையில், கி.மு. 2500 ஆண்டுக்குப் பல ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்குத் தள்ளப்படும் நிலையில், ஏஜியன் நாகரீகம், வரலாற்று அடிப்படையில் கி.மு. 2500 ஆண்டளவில்தான் தொடங்குகிறது. லிசியன் மக்கள், கிரேக்கர் அல்லர் என்பதும், அதுபோலவே கிரேக்க மொழி வழங்கும். ஆனால் கிரேக்கர் அல்லாதாராகிய எல்லெனிஸ்டிக் (Hellenistic) இனத்தவரோடு இரத்தத் தொடர்பு உடையவர் என்பதும், எல்லாத் திறத்தவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனவாம். ஒருவேளை அவர்கள் பண்டைய கிரேக்கர் வீரகாவியக் களமாகிய “திராய்” (Troy) நகர மக்களாகிய “த்ரோஜன்” (Trojans) இனத்தவரோடு இரத்தக்கலப்புடைய வராகலாம். இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படுமாயின், தமிழ் மக்களின் ஒரு பிரிவினர், புதியன காணும் முயற்சியாக, சிற்றாசியாவில் குடியேறினார்; “டிரெம்மிலி” (Tremmili) என அறியப்பட்டனர் என்ற முடிவை மேற்கொள்வது முறையாக இருக்கக்கூடும். இந்தக் குடியேற்றம், இக்காலத் தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, பர்மா, மற்றும் மலேயா நாடுகள் மற்றும் பிறநாடுகளில் குடியேறியதற்கு ஒப்பாகும்.

மனித இன உடற்கூறு வேறுபாடு உணரவல்லார்களின் கற்பனைகளுக்கு முடிவே இல்லை. (குறிப்பு : 11 காண்க) தொல்பொருள் ஆய்வு மற்றும் வரலாறுகள் வெளிப்படுத்தும், தென்இந்தியாவில் மக்கள் வாழ்க்கை, பழங்கற்காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து வந்துளது என்ற உண்மையிலிருந்து