பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழர் தோற்றமும் பரவலும்



மகளிர் அணியும் நீலகிரிக்கு உரியதான ஜெபமாலை கண்டுபிடிக்கப்பட்டது. (O.G.S. Crawford Antiquity: Vol VI.p. 259) திராவிடரின் பிறப்பில் இவை அனைத்தும் ஏற்கும் பொறுப்பு என்ன? இவை அனைத்தும் ஒரு மொழி, அம்மொழி பேசும் மக்களோடு, குடி பெயர்ந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்து திராவிடர்கள், மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர் என முடிவு செய்யலாமா? உண்மையில் அது வேறு வழியாதலே உறுதி ஆதல் வேண்டும்.

“அனாஸர்” என்ற பெயரால் அறிமுகப்படுத்தப்படும் “தாஸர்” அல்லது “தஸ்யூர்”களை (குறிப்பு:17 காண்க)த் திராவிடர்களோடு இனம் காண்பது மற்றுமொரு மனித இயல் தொடர்பான, விளங்காப் புதிர். “அனாஸா” எனும் சொல் பல்வேறு வகையாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சிலர், “அனாஸா”, மூக்கற்றவர் (குறிப்பு : 18 காண்க) எனப் பொருள் கொண்டு, தட்டையான மூக்குடைய திராவிடப் பழங்குடியினரோடு தொடர்புபடுத்துகின்றனர். திரு. சாயனா (Sayana) அவர்கள், பேச்சு அற்றவர் எனும் பொருள் உடையதான “ஆஸ்யரஹித்” எனப் பொருள் கொண்டுள்ளார். அவ்வாறு கூறுவதால், அவர்கள் ஊமைகள் என்பது பொருள் அன்று. இலக்கிய அளவில் செம்மையுறப் பெற்ற சமஸ்கிருதம் போல் அல்லாமல். பொருள் விளங்கா மொழி பேசுபவர் என்பதே அதன் பொருளாம். இத்தஸ்யூக்களை, யாதேனும் ஓர் இனமூலம் அல்லது வேறோர் இனமூலத்தோடு இனம் காணும் முயற்சியில் அவர்களை, இரானியர்களோடு இனம் காண்பது போலும் கற்பனைத்திறம் வாய்ந்த பலப் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. நாகரீகம் அற்ற, காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து, தங்களுக்கு எனத் திருந்திய மொழி இல்லாத, சமயக்கட்டுப்பாடு அற்ற மக்களாக அவர்களை மதிப்பதே, மிகவும் ஏற்புடைய