பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழர் தோற்றமும் பரவலும்


ஆதிமுன்னோர் (Proto Dravidian) என்ற கற்பனைக் கருத்து எடுத்து முன்வைக்கப்பட்டுளது. திராவிடர் படையெடுப்பு என்பது எவ்வாறு வலுவற்றதோ, அதுபோலவே, திராவிட ஆதி முன்னோர் என்ற கற்பனையும் வலுவற்றது தான். (குறிப்பு : 20 காண்க.) பண்டைத் தமிழர்கள், தென்னிந்தியாவின், கற்கால நாகரீகத்தின் சொந்தக்காரர்; உரிமையாளர் என்பதே. என் மாற்ற முடியாத, தீர்ப்பு ஆகும். (குறிப்பு : 21 காண்க)

மேலும், பன்மொழி ஆய்வாளர்கள், மற்றும், மொழி வளர்ச்சி ஆய்வாளர்களின் சான்றும் நமக்கு உளது. ஓர் இனத்தின் மூலம் பற்றிய ஆய்வுக்கு அவ்வினத்தின் மொழியைவிட, அவர்கள் நாகரீகம் ஓர் அளவுகோல் ஆகாது. சமஸ்கிருத தர்மா என்ற சொல்லைப் போலவே இனம் என்ற சொல்லையும், மொழிபெயர்த்தல் அருமை உடையது; எளிதில் இயலாதது; இரண்டு சொற்களும் பொருள் தெளிவில்லாமல் சொற்செறிவு இல்லாமல் ஆளப்படுகின்றன. மேலும் கூற விரும்புகின்றேன். அப்பொருள் பற்றிய ஆய்வாளர்களால், அவை வரன் முறையில்லாமல் ஆளப்படுகின்றன. இனம் பற்றிய பொருள் குறித்த, அண்மைக் கால ஆராய்ச்சியாளர்கள், நம் கருத்துப் படியே, இனம் என்பது ஒரு கற்பனை தொல்லை மிகத் தரும் கற்பனை என்ற முடிவுக்குச் சரியாக வந்துள்ளனர். (See Julian Huxley:-Race in Europe Oxford pamphlets. No.5-1939)

நாகரீக அடிப்படைக்கு நனிமிகு மதிப்பும், இன அடிப்படைக்கு நனிமிகக் குறைந்த மதிப்பும் கொடுப்பதே, மக்கள் இனம் பற்றிய அண்மைக்கால ஆய்வாளர்களின் முறையான ஆய்வின் குறிப்பிடத் தக்க விளைவாம். ஐரோப்பாவைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆங்கு இலத்தீன் நாகரீகம், மற்றும் ஆங்கில ஜெர்மானியர் நாகரீகம் என்பனவற்றைத்தான் அறிகிறோமே ஒழிய, இலத்தீன் இனத்தை ஆங்கில ஜெர்மானிய இனத்தை அறிய