பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 தமிழர் தோற்றமும் பரவலும்

பெரும்பாலும் அருகிச் சக்கரங்களால் செய்யப்பட்டனவும், கிடைத்தன. சமஸ்கிருதப் பண்பாட்டின், தாக்குதலுக்கு முன்பே, மட்பாண்டத் தொழில், அழகிலும் வடிவமைப்பிலும் உயர்ந்த, முழு வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. எகிப்திய, கிரேக்க, இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களைச் சார்ந்த வெள்ளைக் களிமண்ணால் ஆன குவளைகளுக்கு இணையான குவளைகளுக்கு நனிமிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிற்றாசியாவின் (Asia Minor) வடமேற்கில் உள்ள பழைய டிராய் (Troy) நகரில் உள்ள இடிபாடுகளில் காணப்பட்ட பாண்டங்களோடு முழுவதும் உருவு ஒத்த புதிய கற்காலத்துப் பாண்டங்கள் கணக்கில நமக்குக் கிடைக்கின்றன. மேலும், பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட செம்பழுப்பு நிறக்கல் சவப்பெட்டி, இராக் நாட்டுப் பாக்நாத், இத்தாலிய நாட்டு எட்ருஸ்கன் (Etruscan) ஆகிய இடங்களில் காணப்பட்ட செம்பழுப்புச் சவப்பெட்டிகள் போன்றுள்ளன.

மண்பாண்டத் தொழிலோடு நெருக்கமான தொடர்புடையது. தென் இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மற்றுமொரு அசைக்க ஒண்ணாச் சான்றாகிய, பிணம் புதை பல்வேறு வகைகளாம். ஐவகைப் பிணம் புதைக்கும் முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

1) பெரிய தாழிகளில் புதைக்கும் புதைகுழிகள் வயநாட்டிலும், ஆதிச்சநல்லூரிலும் காணக்கிடக்கின்றன. இங்கு, மண்பாண்டத் தொழில், பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தாழிகளில் சில, முழு உடலையும் அடைக்குமளவு பெரியன. எரியூட்டல் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. திருநெல்வேலித்தாழிகள், மட்கலம் மற்றும் பிற பொருள்களால் நிறைந்தும், சுற்றிலும் பல்வேறு பொருட்களால் சூழப்பட்டும்