பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள் 31

இருக்கும்போது, இங்குள்ள மண்டைஓடு, தொடக்கக் காலத்திய நீண்ட தலையை உடைய பழங்குடியினர் இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. வயநாட்டுப் பகுதிகளில் உள்ள தாழிகள், இரண்டு அல்லது மூன்று மட்பாண்டங்களைக் கொண்டுளது. ஆனால் பொருள்கள் எதுவும் சுற்றி இருக்கவில்லை. அப்பாண்டங்களின் வடிவமைப்பு, அகத்தே சிவப்புப் புறத்தே மெருகேற்றப் பட்டதுமாம். மிகவும் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால், சங்க இலக்கியங்களில் ஒன்றான மதிப்புமிகு புறநானூறு, தாழியில் புதைப்பதை நால்வேறு இடங்களில் குறிப்பிட்டுளது.


1 கலம்செய் கோவே! கலம் செய் கோவே!

 இருள்திணிந்தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
    அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
    நளந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!
    ...................
தாழி, வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே” -புறம்:228
“கவி செந்தாழி”  புறம்:238
“வயன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
 அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே. -புறம்:256
“கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்காடு” -புறம்:264

2. கால்கள் உடைய தாழி: இவை பல்வேறு அளவு உள்ளவாகியவும், கற்பலகைகளால் மூடப்பட்டனவுமான கல்லறைகள், சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் டெயிலர் சாலையில் உள்ள “பவுன்டெனாய்” (Fontenoy) என்ற பெயருடைய வீட்டில், மேலே கூறியது போலும் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது.