பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் சொற்பொழிவுக்கான
விளக்கக் குறிப்புக்கள்

1. மண்ணியல் ஆய்வு ஊழிக்காலத்தில் இந்தியா

நீண்ட நெடிய மண்ணியல் ஆய்வுக் காலவரம்பில் அளந்து கண்ட வழி. இந்தியாவின் தீபகற்பப் பகுதி, (தென்பால் மேட்டுச் சமவெளிப் பகுதி) நனிமிகப் பழமையானது இப்பகுதியின் வடமேற்கு எல்லையில், இராஜபுதானச் சமவெளியின் குறுக்கே நீண்டு கிடப்பது, ஆரவல்லி என அழைக்கப்படும், நனிமிகப் பழைய மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதியாம். இம்மலைகளின் தெற்கில், நாம் இப்போது அழைப்பது போல், இந்தியத் தீபகற்பம், தொல்லுழிக் காலத்து இறுதிக் காலம் தொட்டே நிலப்பகுதியாம் ஆரவல்லிக் குன்றுகளுக்கு வடமேற்கு நிலப்பரப்பில் மூன்றாம் கடல்கோளுக்கு முன்பிருந்தே, கடல் அடுத்தடுத்துப் பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவல்லி மலைத்தொடர்களால், இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளிலும் கட்டமைப்பு. வடிவமைப்புகளில், மனத்தில் நிறுத்தவல்ல வேறுபாடுகள் உள்ளன. நனிமிகப் பரந்துகிடந்த ஒருபெருநிலப்பரப்பின், கழித்து விடப்பட்ட ஒரு பகுதியாவதல்லது வேறு ஆகாத, அத்தீபகற்பத்தின் இன்றைய வடிவம், வண்டல் மண் படிந்த நிலப்பரப்பாம், சிந்து மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளாம். தாழ்ந்த நிலபரப்பு தோன்றுவதில் கொண்டுபோய்விட்ட மிகப்பெரிய, தொடர்ந்த நிலநடுக்கம் தோன்றிய காலம் தொட்டே, நிலைகொள்ளப்பட்டது. பெரும்பாலும் ஆரவல்லி மலைகளின்