பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழர் தோற்றமும் பரவலும்



14) பலுசிஸ்தானத்தில் வழங்கும் ‘பிராகுவி’ என்ற மொழியில் காணலாம். திராவிட மொழிக்கே உரிய சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, திருவாளர் ‘டென்யஸ்பிரே’ (Denys Bray) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் எது எப்படி ஆயினும், சில அறிஞர்கள் ஒரு மொழிக்கு, அதன் உரிய இடத்தைக் கொடுப்பதற்குச் சரியான முக்கியத்துவமாக, அம்மொழி எழுத்துக்களிடையே உள்ள ஒருமைப்பாட்டு உறவினைக் கொள்வதாகத் தெரிகிறது. அவர்தம் வாதத்தின் போக்கு, பின்பற்றுவதற்குச் சிறிது சிரமமானது.

தன்சொற்களில், இருமடங்கு இலத்தீன் மயமாக மாற்றப்பட்டுவிட்ட, வடஐரோப்பிய மொழியாகிய டியோடோனிக் (Teutonic) இல்லையேல், ஆங்கிலமொழி என எதுவும் இல்லை. யாதோ ஒர் இயற்கைப் பிறழ்ச்சியால், பிராகுவி மொழி, திராவிடத் தாய்மூலத்திலிருந்து, வழிவழியாகப் பெற்ற எல்லாச் சொல்லுருபுகளையும் அறவே களைந்து எறிந்துவிட்டு, அதற்கு ஈடாகப் பெயர்கள் மற்றும் சுட்டுப் பெயர்களோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கவும், வினைகளோடு சந்திப்பு, இடைச் சொற்களை இணைக்கவும், இரானியமொழி அல்லது இந்திய மொழி இலக்கண நெறிகளை மேற்கொண்டால், குறிப்பிடத்தக்க சிறப்பு இயல்பால், திராவிட மொழித் தன்மை வாய்ந்த, சொல்லுருபோடு இணைந்த எதிர்மறை வினைத்திரிபுச் சொற்களுக்குப் பதிலாக, இலக்கண மரபு அல்லாத, வலிந்து கொள்ளும் ஒருவழியில், சாதாரண எதிர்மறை வினையெச்சத்தை மேற்கொண்டு திராவிட மொழியின், அழியாது நிற்கும் எஞ்சிய பகுதியின் இலக்கணக் கட்டமைப்பை, அதன் தன்மை, முன்னிலை, படர்க்கைச் சுட்டுப் பெயர்கள், வினாச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள் ஆகியவற்றைச் செம்மை செய்ய முனைந்தால், இந்திய, இரானிய மொழிகளில் இருந்து கடன்வாங்கிய சொற்கள்,