பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

61



வைத்தது. பண்டே வாழ்ந்திருந்த மக்களோடு, வேறு நாட்டவர் அல்லது இனத்தவர்களின் தேவையில்லாத் தலையீட்டால் நேர்ந்த போராட்டம் போலும் பேரழிவு தரும் மாற்றங்களால் அல்லாமல் அமைதியான மறுமலர்ச்சி நிலையிலேயே அடியெடுத்து வைத்தது: என்ற முடிவிற்கல்லது வேறு, முடிவிற்குக் கொண்டு செல்லாது. புதிய கற்காலத்து நிலப்படத்தின் ஓர் ஆய்வு, அந்நாடு அம்மண்ணுக்கே உரிய நாகரீகம் வாய்ந்த மக்களால் நெருங்க வாழப்பெற்றிருந்தது.தங்களின் பழங்கால இலக்கியங்களில் பதிய வைத்திருப்பதுபோல், அம்மண்ணுக்கே உரியவர்களாக உரிமை கொண்டாடும் தமிழர்களைப் போலவே, அந்நாட்டுப் பிறமக்களும் தொல் பழங்குடியைச் சேர்ந்தவர் அவர் என்ற உண்மைகளை உறுதிசெய்யப் போதுமானதாம். தமிழ் மொழியின் நனிமிகப் பழங்காலத்து வளர்ச்சி நிலைகளில், புதிய கற்காலத்து நாகரீகத்திற்கான தேவைக்கு மேலும் அடையாளங்களை மட்டும் அல்லாமல் அதை அடுத்து வந்த இரும்புக் காலத்து நாகரீகப் பிறப்பையும் கண்டுபிடிக்கலாம். (Jounal of Bihar and Orissa Research Society Vol. XXIV, p. 41-42).

20) தென்னிந்திய மக்களைத் தமிழர்கள் என்றும், தமிழர்களுக்கு முந்தியவர்கள் என்றும் வகைப்படுத்தும் நிலையில், திருவாளர் டாக்டர் மக்லியன் அவர்கள் பெரும்பாலும் சரியான முடிவையே கண்டுள்ளார். வேறுபாடு இனத்தைச் சார்ந்தது அன்று. மாறாகப் பண்பாட்டைச் சார்ந்தது. ஒவ்வோர் ஊழியும் கரடுமுரடான கல்லால் செய்யப்பட்ட கருவிகள் மற்றும், கற்குவியலால் ஆன சவக்குழிக் காலம் முதல், சங்ககாலம் மற்றும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம் வரையான தமிழர் நாகரீகத்தின் வளர்ச்சி, மற்றும் பெருக்கங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எது எப்படியாயினும், அவர்கள் வரலாற்றின் நனிமிகப் பழங்காலத்தில், இந்தியத் தீபகற்பத்திற்கு வந்து