பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

63



பயன் மிகுந்தது எனக் கூறியுள்ளார். (The Indian Antiquary for October 1872). திராவிடர் கூடித்திரியர்கள் ஆவர். அவர்கள் பெளண்டரிகர், ஒட்டர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பஹலவர், சீனர், கிராடர், தாரதர் மற்றும் காசர்களைப் போல, “வீர்ஸ்லா” அதாவது இழி சாதியினர் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என மனு கூறுகிறார். (X. 43-44) ஈண்டுக் கூறிய பழங்குடியினர்களுள் தென்னிந்தியாவுக்கு உரியவராகக் கூறப்பட்டவர், திராவிடர் ஒருவரே. ஆகவே, இப்பெயர் தென்னிந்தியப் பழங்குடியினர் அனைவரையும் குறிக்க எண்ணியதாகத் தெரிகிறது. கூறிய இனங்களுள், ஏதாவது ஓர் இனம் இணைக்கப்படவில்லை என்றால், அது, பெரும்பாலும், ஐத்திரேய பிராமணாவில் குறிப்பிடப்பட்டு, விஸ்வாமித்திரரின், கீழ்ச் சாதியினராகத் தள்ளப்பட்ட புண்டரர், உபரர், புளிந்தர்களோடு வகை செய்யப்பட்ட, உள்நாட்டு, தெலுங்கு பேசும் ஆந்திரராவர். அதே கருத்து மகாபாரதத்திலும் கூறப்பட்டுளது. இனத்தால் இழிந்த கூத்திரியர்களாகக் கொடுக்கப்பட்ட அந்த இரு பட்டியல்களிலும், தென்இந்தியப் பழங்குடியினராகக் குறிக்கப்பட்டவர் திராவிடர் ஒருவரே. ஆகவே, பாண்டியர், சோழர் போலும் தனித்தனிக் குலங்களைக் குறிக்கும் சொற்கள் வடஇந்தியாவில், அந்தக் காலத்தில் நன்கு தெரிந்திருந்தன என்பதை நோக்க, அச்சொல் பொதுவாகவே ஆளப்பட்டுள்ளதாகவே கொள்ள வேண்டும். ஐயத்திற்கு இடம் இல்லாமல், அதே பொருள்நிலையில்தான், ஊழிவெள்ளத்திற்குப் பின்னரும் வாழ்ந்த மனித இன முன்னோர் ஆன நோவா (Noah) என்பவனைப் போலும் இந்திய நோவாவாம், சத்திய வரதனும், திராவிடர் தலைவன் எனப் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளான். (Muir's Sanskrit Text Vol. 1).