பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழர் தோற்றமும் பரவலும்



23) திருவாளர் வி. ஆர். ஆர். தீகூஷிதர் அவர்களின், “தமிழ் நாகரீகம் என்றால் என்ன” (What is Tamil Culture) என்ற ஆய்வுக் கட்டுரையினைக் காண்க. (New Review: Culcutta. June 1937 Page: 513-26).

25) திருவாளர் ஆர். புரூஸ் புட்டே(R.Bruce Foote) அவர்கள், இந்தியாவின் நிலஇயல் ஆய்வுத் துறையில், 1858ஆம் ஆண்டில் சேர்ந்து, 33 ஆண்டுகள் போலும் தம்முடைய நீண்ட பணிக்காலத்தை, நிலஇயல் மற்றும் புதைபடிவ ஆய்வில் செலவிட்டார். அவர் 1863ல், சென்னைக்கு அருகில் பழங்கற்காலத்துக் கருவிகள் சிலவற்றைக் கண்டுபிடித்து இந்தியாவில் இத்துறையின் முன்னோடியாக விளங்கினார். தம் முதல் கண்டுபிடிப்பு குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:

ஆங்கில நாட்டுச் சிறந்த நிலநூல் ஆய்வாளர்களாகிய திருவாளர்கள் ஜோஸப் ப்ரெஸ்டவிச் (Josep Prestwich, John Evans) மற்றும் ஹக் பால்கானர் (Hug Falconer) ஆகியோர், வட பிரான்ஸ் நாட்டில் ஓடி, ஆங்கிலக் கால்வாய்க் கடலில் கலக்கும் ‘சோம்மே” (Somme) ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட, கடின பாறைக் கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்ட கருவிகளைத் தொடக்ககால மனிதன் கையாண்ட, கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த கருவிகளாக, முழுமையாக உறுதிசெய்தது. கடந்த நூற்றாண்டின் தொடக்க அறுபது அளவில் மனித இனத்தோற்றம் பற்றிய ஆய்வில் ஆர்வம் மிக்க ஒவ்வொருவரையும் கிளர்ந்தெழச் செய்தது.

குறிப்பிடத்தக்க, வியத்தகு இக்கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி, என் எண்ணங்களை அப்போது என் பணி செயல்பட்ட தென் இந்தியாவில் அவைபோலும், தொடக்க கால மனிதனின் கலைக்கான அடையாளங்களைக் காணும் இன்றியமை