பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழர் தோற்றமும் பரவலும்



India) என்ற திருவாளர் ரே அவர்கள் நூலையும், பல்லாவரத்தில் உள்ள பாரக்கல் சார்ந்த பொருள்களும், மண்பாண்டங்களும் நிறை கல்லறைகள் (Megalithic and Earthenware tombs at Pallavaram) என்ற நூலையும் காண்க. (J.A.S.B. Vol. IVII part No. 2 of 1885).

27) புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூர் வட்டம், அன்னவாசல், மனிதனின் தொடக்க காலவாழிடம். அமரர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், இந்த மாவட்டந்தான், பழங்கற்கால மனிதனின் தாயகம்; புதுக்கற்கால மனிதனின், பிணம் புதை வழக்கங்களைக் கண்டறிவதற்கு ஆராயத்தக்க மாவட்டமும் இந்த மாவட்டந்தான், என்ற அழுத்தமான கொள்கையைக் கொண்டுள்ளார். இன்றைய புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், மனிதன், பழங்கற்காலக் காலம் முதல், இன்று வரை தொடர்ந்து வளமான வாழ்வு பெற்றமையை உறுதி செய்யும் அகக்சான்றுகள் கிடைக்கின்றன. (புதுக்கோட்டை நாட்டுக் கையேட்டினை “A Manual of the Pudukottai State: Revised Edn. Vol. I Page: 516-518, Vol. II. Chap xxiii. Sec. I) காண்க. இப்புதைகுழிகள் அனைத்தையும், வரலாற்றுக் காலத்துக்கு முந்தியனவாகவோ, புதுக்கற் காலத்துக்கு உரியனவாகவோ, பதிப்பாசிரியர் அவர்களால் வகைப்படுத்தல் இயலாது.

28) திருவாளர் புரூஸ் புட்டே (Bruce Foote) அவர்கள், தென்னிந்தியாவில் பழங்கற்காலத்துக் குறைகள் ஒருசிலவே உள்ளன; அவற்றுள் ஒன்றில் மட்டுந்தான், பழங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன; அவை பிரஞ்சு நாட்டில் லாமாடிலின் (Lamadeleine) என்னும் இடத்தில் காணப்படும் படிவங்கள் காட்டும் கற்காலத்தைச் சார்ந்த (Magaddlinian) செதுக்கப்பட்ட எலும்புகள், குறியீடு செய்யப்பட்ட பற்கள் போன்றனவாம். பழங்கற்காலத்தைச் சேர்ந்த மரத்தால் ஆன,