பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழர் தோற்றமும் பரவலும்


முறைகளும் பின்பற்றப்பட்டன, என்ற கருத்தில் சிந்தனை ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். மற்றொரு முறையாகிய இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிதல், பின்வருமாறு பொருள் கொள்ளப்படுகிறது. அதர்வனசம்ஹிதா (xviii-2-34) இறந்த முன்னோர்களுக்குச் சோற்று உருண்டைகளைப் படைத்து வழிபடு நெறியில் “பரோப்தா” (தொலை விடங்களில் எறிந்து விடுதல்) மற்றும், “உத்தஹைதம்” (மேட்டுப் பாங்கான இடங்களில் எறிந்து விடுதல்) போன்றனவற்றைக் குறிப்பிடுகிறது. இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிந்து விடும் வழக்கம். ஒருவகை மாறுபட்டநிலையில், திபேத்தியர் மற்றும் பாரசீக மக்களிடையே, இன்றும் இடம் பெற்றுளது. சீன யாத்திரீகள் யுவான்சுவாங், இந்தியாவில் இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றனுள், இது ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுக்கு உட்பட்ட புதை குழிகளுள் ஒன்று எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதை, அதனுடன் அகப்படும் கண்டுபிடிப்புக்களின் தன்மையினாலேயே உறுதி செய்யப்படும் எனக் கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டக் குறிப்பேட்டின் (Pudukottai Manual) ஆசிரியர், எதில், இரும்பு அல்லது பித்தளையாலான பொருள் எதுவும் இல்லாமல், புதுக்கற்காலக் கருவிகள் மட்டுமே கிடைக்கின்றனவோ அது. வரலாற்றுக் காலத்துக்கு முந்தியதாம். எங்கெல்லாம், தாழி மற்றும் பாரக்கல் புதை குழிகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை எதையும், கொண்டிராமல், இரும்பாலான கருவிகளையும் பாண்டங்களையும் பெருமளவில் கொண்டிருக்கின்றனவோ, அவை, புதுக்கற்காலத்தை அடுத்து வந்த இரும்புக் காலத்துத் தொடக்கக்காலத்தனவாகி, வரலாற்றுக் காலத்தில் அடி இடுவனவாம். அகில இந்தியக் கீழ்க்கலைப் பத்தாவது மாநாட்டு நடவடிக்கையில் உள்ள, தென்னிந்தியாவில்