பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

71


இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறை என்ற என் கட்டுரையினைக் காண்க (See my paper on the Disposal of the Dead in S. India, in the Proceedings of Tenth All India Oriental Conference page: 530-533.)

32) திருவாளர் பெர்ரி (Perry) அவர்கள் கூற்றுப்படி கி.மு.3வது ஆயிரத்து ஆண்டளவிலேயே, கடல் போக்குவரத்து இந்தியாவைப் பாதித்துவிட்டது. ஆனால், பாரக்கல் புதையல்களின் பரந்து கிடக்கை, கடல்வழிகளைப் போலவே நில வழிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கருத்து அறிவிக்கிறது. மெசபடோமியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு மேலும் முந்திய காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். மெசபடோமியா மற்றும் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு அதற்கும் முற்பட்ட காலத்திலேயே இருந்தது எனக்கூறும் திருவாளர் டாக்டர் எச்.ஜெ. ப்லெயரெ (Dr. H. Pleure) அவர்கள், அல்லது எந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளரோடும் நாம் ஒத்துப் போதல் இயலாது.