பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

75


வந்துவிட்ட சாலமன் கூடச் சிறந்த அறிவாளன். ஆகவே, இவ்விடைத் தாள்களை அறவே ஒழித்துவிட்டு, இந்தியா வாணிகத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுவிட்டான். இது நடைபெற்றது பொன் வளம்மிக்க “ஓய்ஹரி” (Ophir) மற்றும், பண்டைய பொய்னிசியாவும் இன்றைய லெபனானுமான நாட்டின் கடல் துறைமுகமாகிய டையர் (Tyre) ஆகிய நகரங்களில் ஆம், இது, இந்திய வாணிகப் பெருக்கத்தை இயல்பாகவே பெருக்கியிருக்கும். தென் இந்தியாவுக்கும் பாரசீகக் கடற்கரை மற்றும் ஏடனுக்கும் இடையிலான வாணிகப் பெரும் நடிவடிக்கை, மேற்கு ஈரான் நாடாகிய சுசா (Susa) நாட்டு நகராகிய “அச்செமெனிட்” (Achaemenid) நகரம், ஈரான் நாட்டுப் பழம்பெரும் பேரரசின் தலைநகராக இருந்தபோது நேர்ந்த அழிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பானம் பருகும் கிண்ணங்கள் மற்றும் இந்திய நாட்டுச் சங்கு வளையல்கள் ஆகியன, பொருள்மிக்க அகச்சான்றுகளாம். இந்தியத் தேக்கு மரம், பிரிட்டானிய “நிமி ரெளட்” (Nimroud) மற்றும் யூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள “உர்” (Ur) ஆகிய இடங்களில் உள்ள அழிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய “லகாஷ்” நாட்டின் நகராகிய டெல்லோ (Tello) நகரத்தில் சங்காலான அணிகள் காணப்பட்டன. (குறிப்பு 3). பாரசீக மன்னன் டாரியஸ் (Darius), இஸ்ரேல் நாட்டின் கி.மு. 10வது நூற்றாண்டைச் சேர்ந்த காலத்து அரசன் சாலமனைக்காட்டிலும் (Soloman) துணிந்து வினையாற்றத் தயங்காதவன். நிலவழி வாணிகத்தில் உள்ள நடைமுறை இடர்ப்பாடுகளை அவன் உணர்ந்தான். இந்தியாவை மத்தியதரைக் கடற்பகுதிகளோடு இணைக்கும் ஒரு குறுகிய வழியைக் காண விரும்பினான். அதனால், வருங்கால வளர்ச்சியில் எகிப்தியப் பேரரசன். “பார்வோன் நெக்கே” (Pharoah Necho) தொடங்கி வைத்த, சூயஸ் கால்வாயை வெட்டி முடிக்கும் பணியில் வெற்றி கண்டான். கிரேக்க மக்கள் கி.மு. ஐந்தாம்