பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழர் தோற்றமும் பரவலும்


நூற்றாண்டில், மயில்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததும் குறிப்பிடத் தக்கது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பாபிலோனியாப் போக்குவரத்தைப் “பவேறு ஜாதக்” கதையும் (Bavertialaka) உறுதி செய்கிறது. (குறிப்பு:4).

தென்னிந்திய வாணிக வரலாற்றைத் தொடர்ந்து காண்பதாயின், உரோம் நாட்டு வரலாற்று எழுத்தாளன் பிளைனி (Piny) அவர்கள் விளக்கும் உரோம் நாட்டோடான கடல் வாணிப அகச்சான்று நமக்கு உளது. உரோமர்கள் நறுமணப் பொருள்கள், நறுமண எண்ணெய்கள், மிளகு, முத்து மற்றும் நவமணிகளுக்காகச் சென்றனர். இவை அனைத்தும் தென்னிந்தியப் பொருள்களாம். இவற்றிற்கு விலையாக உரோமப் பொன் நாணயங்களையே தந்தனர். தென்னாட்டுப் பல மாவட்டங்களில் எண்ணற்ற உரோம நாணயங்களைக் காணலாம். உரோமப் பேரரசின் கருவூலத்தை ஆண்டு தோறும். ஐந்து லட்சம் எடையுள்ள பொற் காசுகளை, இந்தியா வற்றச் செய்துவிட்டது எனப்பிளைனி அவர்கள் கூறவில்லையோ? (குறிப்பு. 6) கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிலநூல் ஆய்வாளர் திருவாளர் ஸ்ட்ராபோ (Strabo) அவர்கள். கி.மு. 63க்கும், கி.பி. 64க்கும் இடையில் செங்கடல் வழியாக நடைபெற்ற எகிப்து நாட்டுடனான வாணிக வளர்ச்சியை விளக்கியுள்ளார். இவ்வாணிகம் தொடர்பாகப் பண்டைச் சேர நாட்டுத் தலைநகரம் முசிறி, மங்களுர், மற்றும் குஜராட் ஆகிய நகரங்களில் முக்கியத்துவம். திருவாளர்கள். “செங்கடற் செலவு” என்ற நூலின் ஆசிரியர். பெரிப்பிலஸ், பிளைனி மற்றும் கிரேக்க நிலநூல் ஆய்வாளர் தாலமி ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்திலிருந்தும், எகிப்திலிருந்தும் வந்த கப்பல்கள் ஆங்குக் காணப்பட்டன. கி.பி. நான்காம் நூற்றாண்டில், உரோமப் பேரரசின் வீழ்ச்சியோடு வாணிக உறவிலும் சோர்வு ஏற்பட்டது. அந்நிலையில்