பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு. 101

காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாய மொன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசைப் பட்டு விடுவானாம். அதனால் குழந்தைகள் இறந்துபோகும். எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் போதுமாம். இந்த நம்பிக்கை தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், மத்திய ஆசியாவிலும், உலகமெங்கும் நிலவி வந்தது.

குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு ஆகையால், இதனைப் பெண்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். இன்று இவ்வழக்கத்தின் உட்பொருள் நமது தாய்மாருக்குத் தெரியாது.

சீதைக்கும் இராமருக்கும் சிறந்த கலியாணம் சீரான மேளம் வரும் சிதம்பரத்து சங்கு வரும் காசியிலே மாலைவரும் கண் குளிர்ந்த இராமருக்கு பால் போல் நில வடிக்க, பரமசிவர் பந்தடிக்க பரமசிவர் பந்தை நீ பார்த்தடிக்க வந்தவனோ! ஈக்கி போல் நிலவடிக்க, இந்திரனார் பந்தடிக்க இந்திரனார் பந்தை நீ எதிர்த்தடிக்க வந்தவனோ! முத்தளக்கும் நாழி! முதலளக்கும் பொன் நாழி வச்சளக்கச் சொல்லி வரிசையிட்டார் தாய்மாமன் மாம்பிஞ்சு கொண்டு, மதுரைச் சிமிக்கி கொண்டு காது குத்த வாராக கனக முடி உங்களம்மான் மானா மதுரையிலே மாட்டையும் மந்தையிலே மாட்டு விலை கூற வந்த மன்னன் மருமகனோ! என் அரசன் காது குத்த