பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 தமிழர் நாட்டுப் பாடல்கள்

என்ன செல்லும் ஆசாரி பாக்கு பதக்கு பச்சரிசி முக்குறுணி எள்ளு இரு நாழி இளந் தேங்காய் முந்நூறு அள்ளி விளம்புங்க நான் பெற்ற அருமை மகன் காதரிசி சிந்தி விளம்புங்க செல்ல மகன் குத்த பச்சை மூங்கில் வெட்டி

பவள மூங்கில் நார் உரித்து சொச்ச மூங்கில் வெட்டங் குள்ள சுப்பையா 

சொன்ன வரம் தந்தாரோ! ஏறய்யா இராவணா! இறங்கய்யா மேடவிட்டு பாரய்யா இராவணா! இராமர் படை போகிற பாவனையே பொட்டல்ல பொய்பலவா துரோபதைக்கு அத்தனையும் சாதிலிங்கம், சாதிலிங்கம் மேலிருந்து துரோபதை தருமர் கதைகேட்டாளோ! பத்து வருஷமா என் கண்ணே -நீ பாலனில்லா வாசலிலே! கை விளக்குக் கொண்டு நீ கலி தீர்க்க வந்தவனோ! கண்ணே நீ உறங்கு என் கண்ணே கான மயில் நீ உறங்கு கண்ணுக்குக் கண்ணெழுதி-உன் கடைக் கண்ணுக்கு மையெழுதி கண்ணான கண்ணுக்கு என் ஐயா! உனக்குக் கண்ணேறு தையாமல் சுண்ணாம்பு மஞ்சளும் சுத்தி யெறி சூரியர்க்கு

வட்டார வழக்கு: கண்ணேறு தையாமல்-கண்பட்டு விடாமல்.

சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்

        இடம்:

சிவகிரி, நெல்லை மாவட்டம்.